கடந்த ஆண்டு, செப்டம்பர் 3-இல், கிள்ளான், ஜாலான் பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமா-வில் டான் மே தெங் என்பாரை ஒரு கார் மோதித்தள்ளியதில் அவர் உயிர் இழந்தார். மோதிய கார் நிற்காமல் ஓடி விட்டது.
டானின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்துவிட்டுக் காத்திருந்தார்கள். விசாரணை நடப்பதாக தெரியவில்லை. குடும்பத்தாரின் வழக்குரைஞர்கள் எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை.
இதன் தொடர்பில், என்ஜிஓ-வான ஜிங்கா 13, கடந்த வியாழக்கிழமை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரிடம் ஒரு மகஜர் கொடுத்தது.
அதன்பின்னர் வேலைகள் நடக்கத் தொடங்கின. போலீசார், டானின் கணவரையும் தாயாரையும் விபத்து நடந்த இடத்துக்குக் கூட்டிச் சென்று அந்த இடத்தைப் படம் பிடித்தனர். விசாரணையையும் மேற்கொண்டனர்.
“ஆக, போலீசில் புகார் செய்யப்பட்ட பின்னரும்(இதுநாள் வரை) எதுவும் செய்யப்படவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
“இது, காரியங்கள் முறையாகவும் நேர்மையாகவும் நடக்கவில்லை என்பதையும் போலீசின் மெத்தனமான போக்கையும் காண்பிக்கிறது. இதனால் அவர்கள்மீது மக்கள் வைத்துள்ள மதிப்பு பாதிப்புறும்”, என அந்த என்ஜிஓ கூறியது.
போலீஸ் புகர் என்பது இப்போதெல்லாம் ஒரு ஜோக் ஆகிவிட்டது. வேண்டியவர்கள் புகார் செய்தால் உடன் நடவடிக்கை. மற்றவர்கள் செய்தால் …?
காலம் சென்ற மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைச் செயலாளருக்கு துரோகம் செய்து விட்டு சவுடால் பேசிக் கொண்டிருக்கும் உள்துறை அமைச்சரை இந்த கிள்ளான் புகார் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் குடைந்த எடுக்க வேண்டும். அவர் போலீசாரின் இந்த மெத்தனப் போக்கிற்கு பொறுப்பேற்று பதவி துறக்க கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொணர வேண்டும்.
அல்தான் துயா என்ற மங்கோலிய மாது இந்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் இந்நாட்டிற்குள் நுழைந்தார் என்பதற்கான ஆவணம் குடிநுழைவுத் துறையிடம் இல்லை. ஆனால் அந்த வெளிநாட்டுப் பெண் வெடிவைது கொல்லப்பட்டுள்ளார்.
அல்தான்துயா என்ன விக்கிரமாதித்தன் கதையில் வருவது போல் கூடுவிட்டு கூடு பாய்ந்தாரா?
இக்கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய அன்றைய உள்துறை அமைச்சர் ஹிஷாம்முடின் ஹுசேன் இன்று பாதுகாப்பு அமைச்சர்!
இதுதான் நமது அரசாங்க அமைச்சர்களின் நேர்மை.
என்னுடையா சுமையுந்து திருடியவனை கையும் களவுமாக பிடித்து காவலில் கொடுத்தேன் ! 5 வருடமாகிறது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை !
போலிசார் யாரை வேண்டுமானாலும் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால் இந்தியர் சம்பந்தப் பட்ட எதனையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியாது. அதற்குத் தைரியம் வேண்டும்!
போலீசாரின் ஆற்றல் மீது எனக்கு அறவே நம்பிக்கை கிடையாது. ரவுடிகள் குற்றவாளிகள் பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதேயில்லை.
அப்போ.. நம்ம சுஜாதா கேஸ்ஸ ஜிங்கா13 விடம் ஒப்படைக்கலாமே..