“உத்துசான் இப்போது வர்த்தகமாகத் தெரியவில்லை. மற்ற எல்லாத் தொழில்களையும் போன்று பணம் பண்ணுவது அதன் நோக்கமாகத் தெரியவில்லை. அது அம்னோவுடைய சாக்கடை நாளேடாகும்.”
அஜிஸ் பேரி உத்துசான் மீது அவதூறு வழக்குப் போடுவார்
சைமன் லீ 3ed5: டாக்டர் மகாதீர் முகமட்டின் ஊழல் ஆட்சியின் போது சுல்தான்களை அவமானப்படுத்துவதற்கும் சேற்றை வாரி இறைப்பதற்கும் அம்னோ கட்டுக்குள் இருந்த முக்கிய ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தப்பட்டது. அரச குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் மீட்டுக் கொள்ளப்பட்டன.
அந்த கால கட்டம் சுல்தான்களுக்கு அவமானமான நேரமாகும். நாம் படித்த செய்திகள் அனைத்தும் நமக்கு அதிர்ச்சியை அளித்தன. அவை தேசத் துரோகத் தன்மையைக் கொண்டவை. மக்களுக்காக பேசும் அப்துல் அஜீஸுக்கு பல கோடி நன்றிகள்.
டேவிட் தாஸ்: பேச்சுச் சுதந்திரமும் கல்வித் துறை சுதந்திரமும் இப்போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
அப்துல் அஜிஸ் பேரி சட்டத்துறைப் பேராசிரியர். அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் வல்லுநர். அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூற அவருக்கு போதுமான தகுதியுண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மலேசியப் பிரஜை. பிரஜை என்னும் முறையில் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு அவருக்கு கூட்டரசு அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
கேஎஸ்என்: விருப்பு வெறுப்பின்றி சட்டங்களை விளக்கக் கூடிய அஜிஸ் போன்ற பலர் நமக்குத் தேவை. அந்த வகையில் மலாய்க்காரர்களிடையே நிதானமான குரல் அது ஆகும்.
ஆட்சியாளர்களுடைய சரியான அந்தஸ்து குறித்து சாதாரண மலாய்க்காரர்களுக்கும் சில ஆட்சியாளர்களுக்கும் கூடத் தெரிவிக்கப்பட வேண்டும். யாரும், எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்களைத் தவறாக வழி நடத்தி நாட்டுக்குச் சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க அது உதவும்.
பெர்ட் தான்: எத்தனையோ சட்ட வழக்குகளுக்கு இடையிலும் உத்துசான் எப்படித் தான் உயிர் வாழ்கிறதோ ? ஆண்டுக்கு ஆண்டு அதன் விற்பனை சரிந்து வருகிறது. அதனால் வர்த்தகமும் மோசமாக இருக்கிறது. புர்சா மலேசியாவில் அதன் பங்கு விலை 74 சென் ஆகும்.
உத்துசான் இப்போது வர்த்தகமாகத் தெரியவில்லை. மற்ற எல்லாத் தொழில்களையும் போன்று பணம் பண்ணுவது அதன் நோக்கமாகத் தெரியவில்லை. அது அம்னோவுடைய சாக்கடை நாளேடாகும்.
நிக் வி: உத்துசானுக்கு இந்த வழக்குகள் தூசுக்கு சமமானவை. அம்னோ மில்லியன் கணக்கான மக்கள் பணத்தை கொள்ளையடித்து உத்துசானுக்குக் கொடுக்க முடியும்.
ஏஸ்: அஜிஸ் பேரிக்கு எங்கள் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒர் உண்மையான நிபுணர், சட்டத்தை தெளிவாகவும் சரியாகவும் விளக்குவார்.
அம்னோ/பிஎன் இப்போது இரண்டு விஷயங்களுக்காக அஞ்சுகிறது
1) மக்கள் கல்வி கற்றவர்களாகி விட்டனர்
2) இன, சமய வேறுபடின்றி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு விட்டனர்
அப்2யூ: சிலரும் சில அமைப்புக்களும் சட்டத்திற்கும் மேலானவர்கள். உத்துசான் மீது வழக்குப் போடுவது கால விரயம்.
சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் பக்கம் என்னும் துணிச்சலினால் மலாய் தீவிரவாதிகள் உயிர் வாழ்கின்றனர். அதிகார வர்க்கம் தங்களைப் பாதுகாக்கும் என்பதால் அவர்கள் எதற்கும் சண்டை போட தயாராக இருக்கின்றனர்.
அமைதியை விரும்பும் மலேசியர்கள் காத்திருந்து அடுத்த பொதுத் தேர்தலில் தங்கள் வெறுப்பை வாக்குப் பெட்டிகளில் காட்ட வேண்டும்.
ரிக் தியோ: அஜிஸ் பேரி நீங்கள் நல்லது செய்துள்ளீர்கள். அந்த குப்பை ஊடகத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் உங்களுக்குத் துணை நிற்கின்றனர். அது செய்தி ஊடகம் அல்ல. இனப் பூசலை வளர்க்கும் பிரச்சார ஏடாகும்.
உண்மை: உத்துசானில் பொய்களுக்கு மேல் பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர். பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதின் மூலம் அவர்கள் நரகத்துக்கு போவார்கள்.
அடையாளம் இல்லாதவன்: அஜிஸ் காட்டிய துணிச்சலுக்கு நன்றி. உண்மையைச் சொல்வதற்குத் தயங்கக் கூடாது. தவறு செய்ய அச்சப்பட வேண்டும். உத்துசானை நொடித்தும் போகும் அளவுக்கு வழக்குப் போடுங்கள். அதன் செல்வாக்கு இப்போது சரிந்து விட்டது. பள்ளிக்கூடங்களுக்கு இலவசமாக அந்த பத்திரிக்கையை இப்போது விநியோகம் செய்கின்றனர்.
சுவர்க் கண்ணாடி: அம்னோவுக்கு எதிராக உள்ள யாருடனும் உத்துசான் இப்போது சண்டை போடுகிறது. அபத்தமானதை தனது ஆயுதமாக அது பயன்படுத்துகிறது.