அம்னோ மகளிர் தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரில் ஒருவரான மஸ்னா மஸ்லான், முன்னாள் மகளிர் தலைவர் ரபிடா அசீசின் உரிமைபெற்ற பிரதிநிதி என்று கூறப்படுவதை மறுக்கிறார்.
கடந்த சனிக்கிழமை, கடைசி நேரத்தில்தான் மகளிர் பகுதி உயர்பதவிக்குப் போட்டியிட முடிவு செய்ததாகவும் அதற்காக யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறினார்.
“சொந்தமாக சிந்தித்து முடிவெடுக்கும் என்னுடைய ஆற்றலுக்குக் கொஞ்சம் மரியாதை கொடுக்கப்பட வேண்டும்”, என்றாரவர்.
தம் முடிவை, பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப் உள்பட, பலருக்குத் தெரியப்படுத்தியதாக மஸ்னா கூறினார். ஆனால், ரபிடா அவர்களில் ஒருவரல்ல.