காலஞ்சென்ற மலாயா கம்முனிஸ்டுக் கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் அனுமதித்தால் அதை வைத்து அவருக்கு ஒரு நினைவு மண்டபமே அமைத்து விடுவார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
“அஸ்தி ஒரு பிரச்னை அல்ல. ஆனால் அதை வைத்து யாராவது ஒருவர் அவருக்கு ஒரு நினைவிடம் கட்டுவார். அது, அவருக்கு ஒரு அங்கீகாரமாக அமையும். அதுதான் எங்கள் கவலை”, என இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஜாஹிட்.
அதில் என்ன தவறு கண்டீர். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய ஒருத்தருக்கு மடம் எழுப்புவதில் என்ன தவறு?. நம் நாடு சுதந்திரம் அடைந்தவுடன் மலாய்க்காரர்கள் பின் தங்கியுள்ளனர் என்பதால், அவர்களை மற்ற இனங்களோடு சரிசேர்க்க பத்து ஆண்டுகள் தேவை என அன்றைய நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. மலாய்க்காரர் அல்லாதாரும் இம்முடிவிற்கு ஒப்புக்கொண்டனர்.ஆனால் அதையே சாதகமாக்கி, மற்ற இனத்தவரை அடிமைகளைப்போல் உங்களது செயல் தற்போதைய இளையோர் இன்னும் அறியாதுள்ளனர்.
அம்னோகாரனுக்கு எல்லாம் பயம் ,சின் பெங் பயம் ,சின் பெங் அஸ்தி பயம் ,சின் பெங் மடம் பயம்,சின் பெங் ஆவி பயம் !
தீவீரவாதத்தை கைவிட்டுதானே அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர். கொலைகாரன் என்று சட்டத்தால் தீர்ப்பளிக்கபட்ட மகாராஜலேலாவுக்கு பேராக், பாசிர் சாலாக்கில் மடம் எழுப்பும் போது, இந்நாட்டின் சுதந்திரத்திற்காக ஜப்பானிய ராணுவத்தையும் பின்னர் பிரிட்டிஷ் ராணுவத்தையும் எதிர்த்து போராடிய சின் பெங்கிர்க்கு மடம் எழுப்புவதில் என்ன தவறு இருக்க முடியும். சுயமாக சிந்திக்க தெரியாத ஜென்மங்களை இந்நாட்டு மந்திரிகளாக்கி விட்டு, எதிர்காலத்தில் இந்நாட்டு மாணவர்களை உலக தரம் வாயிந்தவர்களாக்குவோம் என்று புதிய கல்வி பெருந்திட்டம் போடுவதால் என்ன பயன்? சொல்லும் அறிவிலி மந்திரியே?
இந்த ஆளு மூளை குழம்பி உளறுகிறான்.
ஜாகிட் பயப்படுவது உண்மைதான் .அஸ்தியை கொண்டுவந்து ஜாகிட் வீட்டுக்கு முன் வைத்து நினைவு மண்டபம் கட்டி விட்டால் என்ன செய்வது அதான் மனுஷன் பயப்படுறான்?
மடத்தை பேசும் ஜடம்…..!
எல்லாம் ‘உங்க நேரம்’ டா சாமீ !
எங்க தலை விதிய இறைவா?
அஸ்திகே இந்த பயமா? அவர் உயிரோடு வந்தால்.ஏனைய நிழலை பார்த்து இப்படி நடுக்கம்.
அட பயந்தாங்கொள்ளி …
அட முட்டாப்பய மவனே, இதுவெல்லாம் கதையா, ஆஸ்தி வராம சின் பெங் மண்டபம் என்று கட்டண காதை அறுத்துடுவையா?
முட்டாள்களின் வாதம் .மடம் கட்டுவதக்கு அஸ்தி தேவையில்லை .ஒவ்வொரு தனி மைந்தனும் நினைவு மண்டபம் கட்ட முடியும்.அந்த நினைவு மண்டபத்தில் அஸ்தியை வைக்க வேண்டும் என்பது காட்டாயம் அல்ல.இதைக்கூட முறையாக தெரிந்துக்கொள்ளாமல் அவசரத்தில் , ஆணவத்தில் , அதிகார வெறியில் எப்போதும் இப்படி உளறுவது இவரது வாடிக்கை.அம்னோ வின் அதிகார வெறிக்கு இவர் தான் நல்ல எடுத்துக்காட்டு.
ஆனால் பாகன் டத்தோவில் உள்ள இந்தியர்கள் தான் எப்போது இவரது பணத்திக்கு சோரம் போய்விடுகின்றனர்.பாகன் டத்தோவில் உள்ள ம இ காவினர், IPF கட்சினருக்கு சூடு சொரணை வர வேண்டும்.அப்போது தான் இப்படி பட்ட இன வெறியர்களை நாம் கலைஎடுக்க முடியும்.
பாகன் டத்தோ இந்திய வாக்காளர்களே உணருங்கள்.அடிமையில் சுகம் கானாதிர்கள்.விழித்தெழுங்கள் நமது உரிமைக்காக , எதிர் கால சந்ததியினருக்காக சிந்தித்து எதிர் வரும் தேர்தலில் வாக்களியுங்கள் என்ற உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் .மாறுங்கள்.மாற்றுங்கள்.