‘பினாங்கை முன்மாதிரியாகக் கொள்வீர்; நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதை நிறுத்துவீர்’

1-stevenமத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும், பினாங்கு அரசின் மாற்றுத்தரப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் முயற்சியைப் பின்பற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயக முதிர்ச்சியை வெளிப்படுத்தும் பினாங்கு அரசின் முடிவைப் பாராட்டிய புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம்-மும் (இடம்), புக்கிட் பெண்டேரா எம்பி ஜய்ரில் கீர் ஜோஹாரியும்   நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது மாற்றரசுக் கட்சி எம்பிகளிடம் வேற்றுமை பாராட்டுகிறார்கள் என்றனர்.

இவ்வாண்டு 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ரிம 185.5 மில்லியன், அதாவது ஒரு தொகுதிக்கு ரிம835,000,  ஒதுக்கப்பட்டுள்ளது.

“அவப்பேறாக, அந்த ஒதுக்கீட்டை  நிர்வகிக்கும் அதிகாரமோ  அதன்கீழ் மேற்கொள்ளப்படும்  திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரமோ மாற்றரசுக் கட்சி எம்பிகளுக்கு இல்லை”,  என்றார்கள்.