அரசாங்கத்தில் ஊழலை ஒழிக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ள பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதில் முனைப்புக் காட்டுகிறார்.
இடைத்தரகர்களால்தான் தொழிற் செலவுகள் தேவையில்லாமல் கூடி விடுகின்றன என்றார். ஏனென்றால் அவர்களுக்கு வேறு கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் தொழிலின் மதிப்பு கூடுகிறதா என்றால் எந்த வகையிலும் கூடுவதில்லை.
“மலேசியாவில் ஊழல் எல்லாத் துறைகளிலும் உள்ளது. அரசாங்கம் முதலில் கட்டுமானத் துறையில் ஊழலை ஒழிக்க முற்படும்”,என்று லவ் கூறினார்.
ரிம500 மில்லியனுக்கு மேல் மதிப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை ஒரு கண்காணிப்புக் குழு கண்காணித்து வரும்.
“அதற்கடுத்து சுகாதாரப் பராமரிப்புத் துறை, நகராட்சி மன்றங்கள்மீது கவனம் செலுத்தப்படும்”.
BN அரசாங்கம் தொலைந்தால் நாடு உருப்படும் ! மக்கள் சிந்திக்க வேண்டும் !