பணக்காரர்களான 40விழுக்காட்டினர் உதவித் தொகைகளில் 80விழுக்காட்டை அனுபவிக்கின்றனர்

ahmad-maslan2அரசாங்க உதவித் தொகை யாரை இலக்காக வைத்துக் கொடுக்கப்படுகிறதோ அவர்களைச் சென்றடைவதில்லை எனத்  துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் இன்று கூறினார்.

“நாட்டில் உயர் வருமானம் பெறும்  40 விழுக்காட்டினர்தான் உதவித்தொகைகளினால் கிடைக்கும் நன்மைகளில் 80விழுக்காட்டைத் துய்க்கிறார்கள்” என்றாரவர். ஆக, உதவித் தொகை  சிறந்த பயனை அளிக்கவில்லை.

ஆனால், அடுத்த ஆண்டு பட்ஜெட்டில், பந்துவான் ரக்யாட் 1மலேசியா உதவித் தொகை (பிரிம்) அதிகரிக்கப்படும். அது, அரசாங்க உதவி குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் என்றவர் வலியுறுத்தினார்.

அண்மைய எண்ணெய் விலை உயர்வு பற்றிக் கருத்துரைக்கையில்  மஸ்லான் இவ்வாறு கூறினார்.