தேசிய கல்வி செயல்திட்டத்தை உருவாக்குவது மிகப் பெரிய வேலை என்பதால் ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸே அண்ட் கோ-வுக்கு ரிம20 மில்லியன் என்பது “நியாயமான” கட்டணம்தான் என்கிறார் கல்வி அமைச்சர் முகைதின் யாசின்.
அத்திட்டத்தைத் தயாரிக்க ஈராண்டு ஆனது என்பதுடன் பன்னாட்டு நிபுணர்கள் பலரது ஆலோசனையையும் பெற வேண்டியிருந்தது என்பதால் அந்நிறுவனத்துக்கு ரிம20 மில்லியன் கொடுத்தது நியாயம்தான் எனத் துணைப் பிரதமருமான முகைதின் குறிப்பிட்டார்.
வெளிநாட்டவரின் மூளையும், வெளிநாட்டவரின் உழைப்பும் இல்லாமல் இந்த அம்னோக்காரர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது இந்நாட்டின் வரலாறு, உலகமறிந்த உண்மை.
தேசிய கல்வித் திட்டத்தை உருவாக்குவது பெரிய வேலை. தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதற்கு திட்டமிடுவது பெரிய வேலைதான்! இரண்டாண்டு வேலைக்கு ரிம20 மில்லியன் கொடுத்தது என்ன பெரிய விசயாமா என்று கல்வி அமைச்சின் துணை அமைச்சர்களில் ஒருவர் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ரிம20 மில்லியன் என்ன, ரிம200 மில்லியன் கொடுத்தாலும் நியாயமானதுதான் என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கூறுவார்.
தாய்மொழிப்பள்ளிகளுக்கு, குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கு, நிலம் கொடுப்பது என்றால்தான் அவருக்கு வயிற்றுக் கடுப்பு ஏற்படும்.
இந்நாட்டின் வெப்ப மண்டலக் காட்டை தங்களுடைய வெறும் கைகளைக் கொண்டே அழித்து நாடாக்கியவர்களின் தமிழ்ப்பள்ளிக்கு நிலம் கொடுக்க அவர் தயாராக இல்லை. அரசாங்கம் பள்ளிகளுக்காக ஒதுக்கியிருக்கும் நிலங்கள் எல்லாம் தேசியப்பள்ளிகளுக்கு மட்டுமே என்று முகைதின் கூறியுள்ளார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலங்களை அவார்களே வாங்கிக் கொள்ள முடியாதா என்று கேட்டுள்ளார். இதுவும் நியாயமான கேள்விதான் என்று முகைதின் கூறுவார்.
இது ஒரு முட்டாள்களின் ராஜியம் என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன் . உண்மைதான் என்று துன் கோயா குட்டி சாட்டை அடி கொடுத்துள்ளார் UMNO காரனுக்கு !! இப்போதுள்ள தலைவர்கள் UMNO எல்லாம் முட்டாள்கள் , இந்த முட்டாள்கள் அறிவாளிகளை கட்சியில் செற்பதில்லையாம் , அதிமுட்டாள்களை மட்டும் சேர்ப்பார்களாம். இந்த ஒரு சான்றிதல் போதாதா ? முகைதின் யார் என்று கூறுவதற்கு ??
கல்வி சம்பந்தம் இல்லாத அறிவாளிகள் தானே கல்வி அமைச்சில் பணிசெய்கின்றனர்? சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்! உங்க மண்டையில் ஒன்னும் இல்ல அதுனால அடுத்தவன் கிட்ட ஓசி வாங்கி இருக்கீங்க?
ரிம20 மில்லியன் இவனுக்கு எவாளவு தெரிலிய ???