நஜிப்பின் பொருளாதாரத் திட்டங்களில் குறை காண்கிறார் தெங்கு ரசாலி

1 ku liபிரதமர் நஜிப் அப்துல்  ரசாக்கின் பொருளாதாரத் திட்டங்களைச் சாடிய முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி,  அவை தவறான போக்கைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்க உருமாற்றத் திட்டம்,  பொருளாதார உருமாற்றத் திட்டம் ஆகியவற்றைச் சேர்த்தே அவர் குறைகூறினார்.

பெட்ரோனாஸின் நிறுவனரும் நஜிப்பின் தந்தையார் அப்துல் ரசாக் உசேன்  நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தவருமான தெங்கு ரசாலி,  அரசாங்கம் புதிதாக  உத்தேசித்திருக்கும் “முடிவில்லா வாய்ப்புகள்” சுலோகம்கூட என்ன சொல்லவருகிறது  என்று  புரியவில்லை என்றார்.

பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்)-வையும் அந்த மூத்த அம்னோ தலைவர் குறைகூறினார். அது அரசாங்கக் கடன் நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.