குற்றத்தடுப்புச் சட்டத்தில்(பிசிஏ) கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் அரசமைப்புக்கு விரோதமானவை என டிஏபி தலைவர் கர்பால் சிங் கூறுகிறார்.
“நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லும் பொறுப்பு இருந்தாலும் அரசமைப்புடன் ஒத்துப்போகாத ஒன்றைத்தான் செய்கிறோம். அது அரசமைப்புக்கு முரணானது”, என்றாரவர்.
அமைச்சர் முடிவு செய்த ஒன்றை இப்போது மூவரடங்கிய வாரியம் முடிவு செய்யும் என்பது பெரிய வேறுபாடு இல்லை. திருத்தங்கள் செய்யப்பட்டாலும், அச்சட்டம் ஏற்கனவே இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ) போன்றதுதான் என்று கர்பால் குறிப்பிட்டார்.
சட்டத்தை எடுத்துச் சொல்லத்தானே உங்களை பார்லிமெண்டுக்கு அனுப்பினோம். அங்கே சொல்லி அழுது புரளாமல் இங்கே வந்து எங்களிடம் சொன்னால் நாங்கள் என்ன செய்வது?அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பார்லிமெண்டுக்கு உள்ளேயே தர்ணா போட்டு உட்காருங்கள். அப்பொழுதாவது அம்னோ அரசாங்கத்துக்குப் புத்தி வருதா என்று பார்ப்போம்.
சார் பிரச்னை அவுங்களுக்கு இல்லே ,பெரச்சனை நமக்கு.நாம் பப்ளிக் நமக்கும் பொறுப்பு இருக்கு.பாதிக்க படுவது பப்ளிக் தான்.