கெராக்கான்: விசாரணையின்றிக் காவலில் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

gerakanதடுப்புக்காவல் என்பது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அந்த நடைமுறையை அடியோடு  கைவிடுவது நல்லது என பிஎன் உறுப்புக் கட்சியான கெராக்கான் கூறுகிறது.

“கடந்த காலத்தில்  தடுப்புக்காவல் என்பது தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருகிறது. அதனைப் பொதுமக்கள் ஆத்திரத்துடன்  எதிர்த்தனர்.  அதன் விளைவாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்ஏ),  அவசரகால சட்டம் (இஓ)  ஆகியவை எடுக்கப்பட்டன.

“இப்போது என்ன உத்தரவாதம் இருக்கிறது?”,  என கெராக்கான் இடைக்காலத் தலைவர் சாங் கோ யோன் ஓர் அறிக்கையில் வினவினார்.

குற்றத்தை எதிர்க்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கெராக்கான் தோள் கொடுக்கும் ஆனால், தடுப்புக்காவல் முறை திரும்ப வரக்கூடாது என்றாரவர்.