ஜிஇ13: மக்கள் நீதிமன்ற விசாரணை விவாதத் தொகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது

13geமலேசியவின் 13 ஆவது பொதுத் தேர்தல் மீதான மக்கள் நீதிமன்ற விசாரணையில் இறுதி வாதத் தொகுப்பு செப்டெம்பர் 27, 2013 இல் தாக்கல் செய்யப்படும். அந்த வாதத் தொகுப்பை பேராசிரியர் குர்தயால் சிங் நிஜார் வழங்குவார்.

13 ஆவது பொதுத் தேர்தல் மீதான அதன் ஐந்து-நாள் விசாரணையை மக்கள் நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 22 இல் முடித்துக் கொண்டது.

அந்த விசாரணையின் போது மக்கள் நீதிமன்றம் 70 சத்தியப் பிரமாணங்களை பெற்றதோடு 49 மலேசிய மக்கள் அம்மன்றத்தின் முன் சாட்சியமளித்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் தேர்தல் மோசடிகள், சட்டத்திற்கு முரணான வாக்களார் பட்டியல், அழியாமை மற்றும் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடுகள் குறித்தவையாகும்.

13 ஆவது பொதுத் தேர்தலில் நடந்த மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து மக்கள் எழுப்பிய ஆட்சேபங்களைத் தொடர்ந்து பெர்சே 2.0 இந்த மக்கள் நீதிமன்ற விசாரனைக்கு ஏற்பாடு செய்தது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை செப்டெம்பர் 27, 2013 அன்று நடைபெறவிருக்கும் வாதத்தொகுப்பில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

விபரம்:

தேதி : வெள்ளிக்கிழமை, செப்டெம்பர் 27, 2013.

நேரம் ; பிற்பகல் மணி 2.30

இடம் : Throne Room, Empire Hotel, Subang Jaya.

மேல்விபரம் பெற 13 ஆவது பொதுத் தேர்தல் மீதான மக்கள் நீதிமன்ற அலுவலகத்துடன் [email protected] வழி தொடர்பு கொள்ளலாம்.