விரைவில் தேர்தல்களை நடத்தவிருக்கும் அரசியல் கட்சிகள், பண அரசியல் பற்றிக் கூறப்படும் புகார்களை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) த்திடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறிய பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் செங் குவான், எதிர்வரும் கட்சித் தேர்தல்களில் பணம் கொடுத்து தங்களைக் கவரும் முயற்சிகளை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அப்படிப்பட்ட முறைகேடுகள் பற்றி அறிந்தோர், எம்ஏசிசி உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த பால் லவ் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பே அமைச்சராக செயல்பட்ட விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருக்கிறது.
ஊழல் எங்கிருந்தாலும் அது ஒழிக்கப்பட வேண்டும். முதலில் அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும், அவர்களுடன் தொடர்புடைய அவர்களது உற்றார் உறவினர்களும் ஊழலில் ஈடுபடுவதை இந்த அமைச்சர் தடுக்க முற்பட வேண்டும். அதன் பின்னர், கட்சிகளில் நடக்கும் ஊழல்களைப் பற்றி இவர் உபதேசிக்கலாம்.
உபதேசம் எளிது. அதனைச் செயல் படுத்துவது கடினம். கடினமான ஒன்றைச் செய்வதைவிட உபதேசம் பண்ணிவிட்டுப் போகலாமே!
ஊழல் ! நம் நாட்டில் அள்ளி அள்ளி பருகும் அமிர்தமடா !! தேன் முழங்கையில் இருந்தாலும் – நாக்கு நக்கத்தான் ஆசைபடும் . இதற்கு முன் எத்தனையோ அரசியல் தலைவர்கள் , அரசாங்க அதிகாரிகள் ஊழலில் சிக்குவது பிறகு பணபலத்தால் – வீதில உலாவருவது இதுதானே உங்கள் அரசாங்கம். குற்றவாளி பிடிபட்டு , 5 அல்லது 6 மாதம் சஸ்பென்ட் ! மீண்டும் உயர்மட்ட தலைவர் ஆவர் இதுதானே நடக்கிறது. ஒரு உதாரணம் – நெகெரி செம்பிலான் – முன்னாள் …. ஈச(Isa) , மீண்டும் அரசாங்க பொறுப்புக்கு வரவில்லைய? ஒரு முறை ஊழலில் பிடிபட்டால் – தலை தூக்காதபடி மரண அடிகொடுக்கவேண்டும் . முடியுமா ????
ஒரு வேலையும் இல்லாத நஸ்ரி மகன் 7.5 மில்லியன் பங்களாவும் அதை தனக்கு தெரியாது அவன் அரண் மனை வாங்கினாலும் எனக்கு சம்மதமில்லை என்று சொல்லும் போது சொந்தம் பந்தம் எல்லாம் ஊழலில் ஊறுகாய் அப்பா சப்பி நக்கி பார்த்துதான் எல்லாம் நடக்கும் . அரசியல் தேர்தலில் பண அரசியல் இல்லை என்றல் 30 ஆண்டு BN வரலாறு எப்போதே காணாமல் போய் இருக்கும்.
இவன் ஒரு அடி முட்டாள் உலகமே இதை பற்றி அறியும் .
நல்லா பொய் சொல்லுங்கட… பணம் மக்கள் பணம்… அனுபவிப்பவன் எல்லாம் அவனுங்க… தமிழ் சமுதாயம் நடு ரோடு தான்….