நெகாரா கூ பாடத் தெரியவில்லை என்பதற்காக, பொறுமை இழப்பது சரியல்ல

1 studentஉங்கள் கருத்து: ‘என்னுடைய பள்ளிக் காலத்தில், 50-கள் 60-களில், எந்தப் பள்ளி முதல்வரும் பாலேக் இந்தியா என்றோ பாலேக் சீனா என்றோ சொன்னதில்லையே, அது எப்படி?’

இன்னுமொரு ஆசிரியர் ‘பாலேக் சீனா, பாலேக் இந்தியா’ என்றார்

ஜிரோனிமோ: மாணவர்களிடம் பொறுமை இழந்தார் என்ற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பள்ளிக் காலத்தில், 50-கள் 60-களில், எந்தப் பள்ளி முதல்வரும் பாலேக் இந்தியா என்றோ பாலேக் சீனா என்றோ சொன்னதில்லையே.

இப்போது மட்டும் இது பரவலாக நடப்பது ஏன்?

டாக்: கொஞ்ச நாள் கழித்து பாருங்கள். கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் எஸ்எம் எங்கு உசேனுக்குச் செல்வார். பள்ளி துணை முதல்வர் மாணவர்களை நோக்கி மலேசியா பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னதில் இனவாதம் எதுவும் இல்லை என்பார்.

ஒரு மலேசியன்: முதலாமாண்டு மாணவனுக்கு நாட்டுப்பண் பாடத் தெரியவில்லை என்றால் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், இடைநிலை பள்ளி மாணவனுக்கு நெகாரா கூ தெரியவில்லை என்றால் எப்படி?

கனாசாய்: எனக்கு வயது 62. நாங்கள் படித்த காலத்தில் ஆங்கிலம்தான் போதனாமொழி. பகாசா மலேசியா ஒரு பாடமாக இருந்தது. ஆனாலும், நெகாரா கூ பாடுவது எங்களுக்கு ஒரு பிரச்னையாக இருந்ததே இல்லை.

இன்று, பகாசா மலேசியாவில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு நெகாரா கூ பாட வரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

நியாயவான்: இனத்தை இழிவுபடுத்திப் பேசியதற்காக எந்தவோர் ஆசிரியரும் வேலைநீக்கம் செய்யப்பட்டதில்லை, பதவி இறக்கப்பட்டதில்லை.

நஜிப் அரசாங்கம் இதற்குத் தீர்வுகாணப் போவதில்லை. பிரித்தாளும் கொள்கைதானே அவர்களை வாழ வைக்கிறது.

லூயிஸ்: அதிகாரிகள் இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது போன்ற சம்பவங்கள் மேலும் தொடரும்.

பூமிஅஸ்லி: இதற்குமுன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்பதால், அதே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்ய அவர்கள் தயங்குவதில்லை.

முகம்மட் அப்துல் மாலிக்: ஆசிரியர் அப்படி பேசி இருக்கக் கூடாது. அதே வேளை, மாணவர்கள் நாட்டுப்பண் பாட மறுக்கிறார்கள் என்றால், அதற்கு நாட்டுப்பற்று இல்லை என்பதுதானே காரணமாக இருக்க வேண்டும்.

எனவே, கல்வி முறையையும் ஆசிரியர்களையும் குறை சொல்வதைக் காட்டிலும் மலேசியாகினி வாசகர்கள் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றைக் கற்றுக்கொடுப்பது  நல்லது.

ஆவாங் டோப்: “மலாய்க்கார்களோ, சீனர்களோ, இந்தியரோ எல்லோரும் மலேசியரே. எனவே, அவர் அப்படிச் சொன்னது தவறுதான். துணை முதல்வரை மன்னிப்பு கேட்கச் சொல்வேன்”, எனப் பள்ளி முதல்வர் கூறியுள்ளார்.

அவராவது நியாயமாக பேசுகிறாரே.