மகாதிர்: ஆலோசனைப் பணிக்கு ரிம20 மில்லியனா? என்னாலும் செய்ய முடியுமே

dr mஅரசாங்கம், தேசியக் கல்வி செயல்திட்டத்துக்கு ஆலோசனை கட்டணமாக ரிம20 மில்லியன் கொடுத்திருப்பது பற்றிக் கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம்மாலும்கூட அந்தப் பணியைச் செய்திருக்க முடியும் என்றார்.

“என்னாலும் உள்ளூர் நிபுணராக பணியாற்ற முடியும். ஆனால், எனக்குத்தான் யாரும் (ஆலோசனை சொல்லும்) வேலை கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்”, என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

உள்ளூர் பல்கலைக்கழகங்கள் தரம் தாழ்ந்திருப்பது பற்றிக் கருத்துரைத்த மகாதிர் அது, அவசரப்பட்டு  உயர்கல்வி விரிவாக்கப்பட்டதன் விளைவாக இருக்கலாம் என்றார்.

“அவசரப்பட்டதன் காரணமாக  கல்வியாளர்கள் கிடைப்பது சிரமமாகி விட்டது. கிடைத்தவர்களிலும் பலரிடம் எதிர்பார்க்கும் தரம் இல்லாதிருக்கலாம்”.