எண்ணெய் விலை மீண்டும் உயர்கிறதா? அரசாங்கம் மறுப்பு

1 ministerஎண்ணெய் விலை நாளையிலிருந்து மேலும் 10 சென் உயரும் என்ற வதந்திகளை அரசாங்கம் மறுக்கிறது.

எண்ணெய் விலை இன்றிரவு உயராது என்று நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.

“ரோன்95-க்கு அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையில் மேலும் 10 சென் குறைக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுக்கிறேன்.  எனவே, ரோன் 95-இன் விலை தொடர்ந்து ரிம2.10 ஆகவே இருக்கும்.  அதன் உண்மை விலை ரிம 2.73”, என்றவர் பதிவிட்டிருந்தார்.

நேற்றிலிருந்து ரோன் 95-இன் விலை மேலும் 10 சென் உயரப்போகிறது என்றொரு வதந்தி உலவி வருகிறது.