1.4 மில்லியன் மலேசியர்கள் ஊழல்வாதிகளா?

1razaliஉங்கள் கருத்து ‘கண்ணைமூடிக் கருத்துரைக்கும் அம்னோபுத்ரர்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. சிலர், மலேசியாவில் ஊழல் என்ற ஒன்று இல்லைவே இல்லை என்றுகூட அடித்துச் சொல்வார்கள்’

துணை அமைச்சர்: மலேசியர்களில்  ஊழலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 5 விழுக்காடு மட்டுமே

லூயிஸ்: பிரதமர்துறை துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், அறியாமல் பேசும் அரசியல்வாதிகள் கூட்டத்தில் நீரும் ஒருவர்.

மலேசியாவின் மக்கள்தொகை சுமார் 28 மில்லியன்.  அவர்களில் 5 விழுக்காட்டினர் ஊழலில் ஈடுபடுபவர்கள் என்கிறீர்கள். அப்படி என்றால் சுமார் 1.4 மில்லியன் மக்கள் ஊழல்வாதிகள் என்றாகிறது.

ஒவ்வொரு தடவையும் கையூட்டு கொடுக்கும்போது ரிம1,000 கைமாறுகிறது என வைத்துக்கொண்டால் ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரிம1.5 பில்லியன் ஆகிறது.

ஊழலைத் தடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  இவ்வளவு பெரிய தொகையை வைத்து ஏழை மக்கள் பெட்ரோலுக்குக் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகாமல் தடுத்திருக்கலாமே.

ஜிஜிஜி: சரியாக சொன்னீர்கள், ரசாலி இப்ராகிம். நீங்கள் குறிப்பிடும் அந்த 5 விழுக்காட்டினரும் கையூட்டு கேட்கும் நிலையில் , நல்ல பதவியில், இருப்பவர்கள். அதாவது உயர் நிர்வாகிகள், அமலாக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள்.

லெஜிட்: எங்கிருந்து கிடைத்தது இப்புள்ளிவிவரம்? மலேசியாவில் ஊழல் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதா, என்ன? ஊழல் செய்பவர்கள் என்பதைக் காட்ட பதிவேடு வைத்திருக்கிறீர்களா? இது அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரமா அல்லது கண்ணை மூடிக்கொண்டு அள்ளி விடப்பட்ட ஒன்றா?

அமைச்சர்கள் புள்ளிவிவரங்களைக் கூறும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாலையோரத்தில் நின்று கொண்டு பேசும் சராசரி மனிதன் போலப் பேசக்கூடாது.

பெர்சே 4.0:  1.4 மில்லியன் என்கிறபோது அரசு ஊழியர்கள் அதற்குள் வருவார்கள். மற்றவர்கள் அம்னோ கட்சியினர்.

இதையெல்லாம் ஏதோ நினைப்பு என்று ஒதுக்கித்தள்ள முடியாது. அப்படி என்றால், ‘வேலையில்லாதிருக்கும்’ அம்னோ-தொடர்புள்ள ஒருவர் ரிம7 மில்லியனுக்கு வீடு வாங்குகிறாரே, அது எப்படி?

மாற்றம் வேண்டுபவன்:  ஐந்து விழுக்காடு. ஒரு சின்ன நாடான நமக்கு இந்த எண்ணிக்கை பெரியதுதான். இது கவலைப்படக்கூடியதல்ல என்று நீங்கள் நினைத்தால் உங்களிடம் ஏதோ கோளாறு என்றுதான் அர்த்தம்.

உண்மை மலேசியன்: அந்த ஐந்து விழுக்காட்டினரும் முடிவு செய்யும் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தால், வேறு வினையே வேண்டாம்.

ஸ்ஸ்ஸ்ஸ் : கையூட்டு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. வியாபாரிகளைக் கேளுங்கள். கையூட்டின்றி எதுவும் நகராது என்பார்கள்.

வெறுப்புற்றவன்: ‘கண்ணைமூடிக் கருத்துரைக்கும் அம்னோபுத்ரர்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. சிலர், மலேசியாவில் ஊழல் என்ற ஒன்று இல்லைவே இல்லை, எல்லாமே நினைப்புத்தான் என்றுகூட அடித்துச் சொல்வார்கள்.

ஜிரோனிமோ: மலேசியர்களில் 5 விழுக்காட்டினர் ஊழல்வாதிகள் என்றால் அவர்களை ஏன் பிடிக்கவில்லை, சிறையில் அடைக்கவில்லை?