பிசிஏ பற்றிப் பேசுவதை தவிர்த்தார் கைரி

1 khairiதம்மை ஒரு முற்போக்கிவாதியாகக் காட்டிக்கொள்ளும் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் குற்றத் தடுப்புச் சட்ட(பிசிஏ)த் திருத்தம் பற்றிக் கருத்துரைப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார்.

இன்று கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் அவரைப் பிடித்துக்கொண்ட மலேசியாகினி செய்தியாளர் பிசிஏ பற்றி கருத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கு கைரி, “நான் பேசவுள்ள அரங்கம் வேறு. பிசிஏ என்பது வேறொரு அரங்கம். நீங்கள் தவறான அரங்கத்துக்கு வந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்”, என்று கூறி நழுவி விட்டார்.

இதில்  வேடிக்கை என்னவென்றால், ‘கடும் குற்றங்கள், குண்டர்தனம் மீதான இளைஞர் கருத்தரங்கு’ என்னும் நிகழ்வில் பேசத்தான் அவர் வந்திருந்தார்.