செர்டாங் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டாவது தடவையாகக் கூரை இடிந்து விழுந்திருக்கிறது.
அம்மருத்துவமனையில், கூரை இடிந்து விழுவது ஒரு வழக்கமாகி விட்டது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மூன்று தடவை கூரை இடிந்து விழுந்திருக்கிறது.
இன்றைய விபத்தில் மகப்பேறு மருத்துவப் பிரிவுக் கூரை அதிகாலை மணி 2.55-க்கு இடிந்து விழுந்தது. ஆனால், யாரும் காயம் அடைந்ததாக அறிவிக்கப்படவில்லை.
சேத நிலவரமும் தெரியவில்லை. விசாரணை நடப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
இதுக்கு போய் அலட்டிக்கலாமா! அரசாங்க குத்தகைன்னா இப்படிதான் கொஞ்சம் இடியும், சாயும். ஒழுகும் அப்புறம் கட்டடமே இடிஞ்சு விழுந்தாலும் அரசாங்கமும் கவலைப் படுவதில்லை, நாமும் கண்டுக்க கூடாது. கேள்வி கேட்டால் விரைவில் சட்டம் உங்கள் மீது பாயலாம்? யாரும் அதி மேதாவித்தனமாக போய் லஞ்ச ஒழிப்பு இலாகாவிடம் புகார் செய்து விடாதீர்கள்! அப்புறம் அவர்கள் உங்களை குடையறதும், அடிக்கடி விசாரணைக்கு அலைக்கிறதும், கீழே இருந்த கல்லைத் தூக்கி காலில் போட்டுக் கொண்ட மாதிரி இருக்கும். நம்பிக்கை இல்லையானால் புகார் செய்துதான் பாருங்களேன்?
விடுங்கப்பா.. எத்தனை மலாய் குத்தகையாளர்கள் படு சந்தோசமா இருக்காங்க.. ஒரு பத்து மில்லியன் ரிங்கிட் லே கட்டிட போராங்க..
நல்லவேளை உயிர்சேதங்கள் இல்லை ! இதுக்கும் புங் மொக்தார் எதனா சொல்வாரே ? ஏற்கனவே பார்லிமெண்டில் ஒழுகுவதற்கு புது அர்த்தம் கண்டுபிடித்தார் , பாப்போம் !
தகுதி வாய்ந்த குத்தகையாளர்கள் என்று மலாய்க்காரர்களுக்கு தானே சான்றுதல் கொடுத்து இருக்கிறது அரசாங்கம்? இதற்கும் அரசாங்கம் தான் பொறுப்பு ஏற்க்க வேண்டும்?
Sorry sir, the hospital have not collapsed. Even it happened Umno Bn will in power. For Malaysian Umno is very2 reliable than any other political party. Hidup UMNO!
இந்தியாவில் இது போல ஒரு கட்டடம் இடிந்தது. உடனே 6 பொறுப்புள்ள அதிகாரிகளை இடை நீக்கம் செய்தார்கள். இப்பொழுது விசாரணை நடக்கின்றது. ஆனால் இங்கு அப்படி அல்ல. எல்லோரும் மூடி மறைகிறார்கள். இது ஒரு இயற்கை என்று சொல்லி மூடி மறைக்க அரசாங்கம் துணை வேறு. இதுதான் 1 Malaysia……. இங்கு பலகட்டிடம் விழுகிறது, பல சாலைகள் இடிகிறது, பல கூடாரம் விழுகிறது. இதுவரை யாரும் பிடிபடவில்லை, போருப்பேட்கவும் இல்லை. இதனால் பலகோடி வீணாகிறது. எல்லாவற்றிலும் ஊழல் எதிலும் ஊழல். யாரையும் இடைநீக்கம் செய்யவில்லை…… என்ன நடக்கிறது? ஒருநாள் ஒரு வாரம் அமைதியாகிவிடும். மறப்போம் மன்னிப்போம்….
நல்லவேளை வீ டமைப்பு நிறுவனங்கள் மலாய் கார்கள் கைவசம் இல்லாதது நாம் செய்த புண்ணியம்