மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி அசாம் பாக்கியை பதவி விலக கோரி இன்று மக்கள் தெரு போராட்டத்தில் இறங்கினர்.
சோகோ ஷாப்பிங் மால் முன் கருப்பு உடை அணிந்த 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூடியிருப்பதைக் காணலாம்.
‘பதவியில் இருந்து கீழே இறங்கு, கீழே இறங்கு, அசாம் பாக்கி’ மற்றும் ‘எழுந்து வாருங்கள் இளைஞர்களே’ என பதாகைகளை ஏந்தி மக்கள் கோஷமிட்டனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பாக்கியின் சமீபத்திய பங்கு உரிமை சர்ச்சையைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்யக் கோரி நகர மையத்தில் மக்கள் கூட்டம் திரண்டுள்ளது.
சோகோ ஷாப்பிங் மால் முன் கருப்பு உடை அணிந்த 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூடியிருந்தனர்.
“நாங்கள் இரட்டை வேசம் போடுபவர்களுக்கு எதிரானவர்கள்” மற்றும் “ஊழலை ப்ளூம்பெர்க்கால் அம்பலப்படுத்தியது ட்டது” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி “கீழே இறங்கு, கீழே இறங்கு, அசாம் பாக்கி” மற்றும் “எழுச்சி பெற்று எழுந்திரு இளைஞர்களே” என்று கோஷமிட்டனர்.
சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், சேதியாவாங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமது, மூடாவின் தற்காலிகத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ், சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஆல்பர்ட் டீ மற்றும் ஆர்வலர் ஹிஷாமுதீன் ரைஸ் ஆகியோரும் கூட்டத்தில் காணப்பட்டனர்.
பேரணியின் ஏற்பாட்டாளர்களான #TangkapAzamBaki செயலகம், MACC தலைவரின் பங்கு உரிமை ஊழல் எதிர்ப்பு அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்துவிட்டதாகக் கூறியது.
























