அரசாங்கம் திரங்கானு எம்பியின் தொலைபேசி இணைப்புகளைக் கண்காணித்து ஒட்டுக்கேட்டதாகக் குற்றம்…

"ஆபத்து" அல்லது "அச்சுறுத்தல்" என்று கருதப்படும் தனிநபர்களுக்கான உள்நாட்டு பாதுகாப்பு பதவி- "Travel Control Office / Order" (TCO) இன் கீழ் அவர்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "இந்த 'நிலை', சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து வகையான இயக்கம், தொடர்பு மற்றும் தொடர்புகளை முழுமையான, திருட்டுத்தனமான மற்றும் தொடர்ச்சியான…

வரிகள்: அமெரிக்க மலேசிய தூதுக்குழுவுக்கு  ஜஃப்ருல் தலைமை தாங்குவார்

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், மலேசியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள்குறித்து விவாதிக்க இந்த மாத இறுதியில் வாஷிங்டனுக்கு மலேசிய பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்க உள்ளார். அவருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (Miti) துணைப் பொதுச்…

எரிவாயு குழாய் தீ விபத்து விசாரணையில் எந்த மூடிமறைப்பும் இல்லை…

சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணை வெளிப்படையாக நடத்தப்படும் என்றும், எந்தத் தரப்பினரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்றும் சிலாங்கூர் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. Selangor Utility Corridor (KuSel) மற்றும் Subang Jaya City Council (MBSJ) ஆகிய இரு நிறுவனங்களின்…

பத்தாங்காலி  படுகொலைக்கு பிரிட்டன் அரசு  மன்னிப்பு கோரியது

டிசம்பர் 12, 1948 அன்று, கிளர்ச்சி பிரச்சாரத்தைத் தொடங்கிய மலாயன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகத்தின் பேரில், பத்தாங்காலியில்  24 கிராமவாசிகளை பிரிட்டிஷ் இராணுவம் கொன்றது, நிராயுதபாணியான மலாயன் சீன கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு இங்கிலாந்து அரசு "ஆழ்ந்த வருத்தத்தை" தெரிவித்துள்ளது. வெளியுறவு அலுவலகத்தில் இளநிலை…

அன்வாரின் ‘ஒற்றுமை அரசாங்கம்’ இரண்டாம் உலகப் போர் யுக்தி –…

1981 முதல் 2003 வரை முதல் முறைபிரதமராக இருந்தபோது இரும்புக்கரம் கொண்ட பிரதமர்  என விமர்சிக்கப்பட்ட டாக்டர் மகாதிர் முகமது, இப்போது அன்வார் இப்ராஹிம் சர்வாதிகாரப் போக்குகளைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஜூன் மாதம் 100 வயதை எட்டவுள்ள மகாதீர், இரண்டாம் உலகப் போரின் போது, வின்ஸ்டன் சர்ச்சில்…

மலேசியா மீதான 24 % அமெரிக்க வரியால் வேலை இழப்பு…

மலேசிய இறக்குமதிகளுக்கு 24 சதவீத பரஸ்பர வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்ததைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மலேசிய தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று தொழிலாளர் குழு அஞ்சுகிறது. அமெரிக்க-சீன வர்த்தகப் போரை அடுத்து, புவிசார் அரசியல் பதற்றத்திலிருந்து ஆபத்தை நீக்குவதன் ஒரு பகுதியாக, மலேசியாவில் முதலீடுகள் மற்றும்…

இன – மத பதட்டங்களைத் தூண்டும் முகநூல்  குழுவிடம்  விசாரணை

இந்து கோயில்கள் தொடர்பான சமீபத்திய சர்ச்சை தொடர்பாக MCMC ஒரு Facebook குழுவின் இரண்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. இன மற்றும் மத பதட்டங்களைத் தூண்டும் திறன் கொண்டதாகவும், அதன் மூலம் பொது அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியதாகவும் நம்பப்படும் தகவல் மற்றும் கருத்துகளைப் பரப்புவதற்கான முக்கிய தளமாக" Facebook குழு…

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: 2 கட்டுமான நிறுவனங்களைக் காவல்துறையினர்…

சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் நேற்று ஏற்பட்ட பேரழிவு தரும் எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பாக இரண்டு கட்டுமான நிறுவனங்களைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தத் தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் பலர் இடம்பெயர்ந்தனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கானைத் தொடர்பு…

கோயில் விவகாரம் தந்த பாடம் என்ன?

இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் கடந்த 132  ஆண்டுகளாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டின் இந்து சமூகத்தினரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் அந்த அனுபவம் வழி நாம் எப்படிப்பட்ட வழி முறையை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்வது…

கோயில்களுடன் அவசரகூட்டம்- இந்து சங்கம்

மலேசிய இந்து சங்கம் (MHS) நாடு முழுவதும் உள்ள கோயில்களுடன் "அவசர"  கூட்டத்தை அறிவித்துள்ளது என்று அதன் பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதி கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய கோயில் இடமாற்றத்தைத் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கூட்டம், ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல்…

முதியோர்களுக்கு கூடுதலான மருத்துவர்கள் – அமைச்சு உறுதி

செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரனுக்கு அரசாங்கம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், முதியோர்களுக்கு கூடுதலான மருத்துவர்கள் மற்றும் உதவித்தொகைகள் அதிகரிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. அதோடு  இந்த மருத்துவர்களுக்கு சிறந்த பதவி உயர்வு வாய்ப்புகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் முயற்சிப்பதாகக் கூறியது. “உள்ளூர் முதியோர் மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, மற்ற…

ஹரி ராயா நல்வாழ்த்துகள்

மலேசியியஇன்று தன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் ஹரி ராயா நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. 

கூகிள்-லில் சட்டவிரோத கோயில்கள் என்ற முத்திரையை நீக்க அரசு உதவ…

கூகிள் மேப் வரைபடத்தில் தேடப்பட்ட இந்து கோயில்களுடன் தோன்றும் "சட்டவிரோத கோயில்" முத்திரையை அகற்ற கூகிள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுமாறு உரிமை துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். இந்து சமூகத்தை அவமதிப்பதாக கூறி, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை விசாரிக்குமாறு தகவல் தொடர்பு அமைச்சர்…

கோவிlலின் நிலைபாடு –  வழக்கறிஞர்களின் பார்வை

கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவின் நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் பதிவு சமீபத்தில் முடிவடைந்த மதனி மசூதி அடிக்கல் நாட்டு விழா அனைத்து தரப்பினருக்கும் இடையே ஒரு தீர்மானத்தை எட்டிய போதிலும், கோவிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்…

மலேசியக் கொடி சின்னத்தை அணிந்தால் ஒற்றுமை வளருமா!

தேசபக்தியை வளர்க்கவும் ஒற்றுமையை வளர்க்கவும், மாணவர்கள் தங்கள் பள்ளி சீருடையில் ஜலூர் ஜெமிலாங் பேட்ஜ் அணிய வேண்டும் (அரசு கட்டாயபடுத்தவில்லை) என்ற புதிய அரசாங்க முயற்சியை கல்வி ஆர்வலர் ஒருவர் நிராகரிர்த்தார். சிறு வயதிலிருந்தே இதுபோன்ற மதிப்புகளை வளர்க்காவிட்டால், இதுபோன்ற முயற்சிகள் பயனற்றவை என்று மலாக்காபெற்றோருக்கான கல்வி  செயல்…

ஜம்ரி வினோத் கைது   

கோயில் இடமாற்றம் மீது முறையற்ற செய்திகளை தகவல் பரிமாற்றம் செய்த  குற்றதிற்காக  ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டு, அவர்  தேச நிந்தனை சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக்…

அன்வார்தான் விளக்க வேண்டும் – பி.குணசேகரம்

பிரதமர் அன்வார் இப்ராகிம், சர்ச்சைக்குரிய இந்து கோவில் சட்டவிரோதமாக கட்டியதாக வகைப்படுத்தியதை மறுக்காமல் விடக்கூடாது, ஏனெனில் அதுதான் சர்ச்சையின் மூல காரணம், மேலும் என்ன நடந்தது என்பதற்கான கருத்துக்கள் வேறுபடுகின்றன. கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜிட்  இந்தியா பகுதியில் உள்ள கோயில், தற்போதைய உரிமையாளர் ஜவுளி நிறுவனமான ஜேக்கல்…

கோயிலின் புதிய இடம் நிரந்தரமாகும்

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கான புதிய இடம் நிரந்தர பயன்பாட்டிற்காக வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் கூறுகிறார். இன்று முன்னதாக, மத்திய பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா, தற்போது ஜாலான் மசூதி இந்தியாவிலிருந்து அமைந்துள்ள 130 ஆண்டுகள் பழமையான இந்து கோயில், ஒரு…

குழந்தை திருமணங்கள்- அரசின் நிலைப்பாடு போதுமா?

குழந்தை திருமணத்திற்கான காரணங்களைக் கையாள்வதற்கான தேசிய உத்தித் திட்டம் குறித்த முன்னேற்ற அறிக்கையை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யுமாறு மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தை டிஏபி தலைவர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியாவில் குழந்தை திருமணங்களுக்கான காரணங்களைக் கண்டறிய ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த…

புனிதமான பாரம்பரியம்தான் நகர உருவாக்கத்தின் கரு   

தாஜுடின் ரஸ்டி - நகரம் என்றால் என்ன? ஒரு நாடு என்றால் என்ன? கோலாலம்பூரில் 130 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலை இடமாற்றம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு இந்தக் கட்டுரை இடைநிறுத்தத்தையும் அர்த்தத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன், இது இன்னும் நகரத்தில் பல இந்துக்களால் மதிக்கப்பட்டு பேணப்படுகிறது. பட்ட…

கோயில் சர்ச்சைக்கு – சோசியலிஸ்ட் கட்சியின் தீர்வு

கோலாலம்பூரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த விஷயத்தை இணக்கமாக தீர்த்து ஒரு ஹீரோவாக எப்படி வெளிப்படுவது என்பது குறித்த தீர்வை PSM வழங்கியுள்ளது. “ஒரு கோயிலும் மசூதியும் அருகருகே கட்டப்படலாம், அத்தகைய முன்னுதாரணத்தைக் கொண்ட…

‘சீனாவுக்குத் திரும்பிப்  போ’ என்ற  ஆசிரியர் மீது விசாரணை

‘சீனாவுக்குத் திரும்பிப்  போ’ என்ற  ஆசிரியரை கல்வி அமைச்சு விசாரிக்கிறது. கல்வி சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் எந்த வகையான இனரீதியான அறிக்கைகள் அல்லது செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலாய் மொழியுடன் சிரமத்தை எதிர்நோக்கிய ஒரு இடைநிலைப் பள்ளி மாணவனை “சீனாவுக்குத் திரும்பி போ” என்று…

கோலாலம்பூர் கோயிலும்  கட்டப்பட உள்ள மசூதியும்

நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இருந்த ஒரு தனியார் நிலத்தில் மசூதி கட்டுவதற்கான ஒரு திட்டம். அது தொடர்பாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மார்ச் 27 அன்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கோயில் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தியதாகக் கூறப்படும்…