நூர் அமேலியா ஜைனாபிலா ஜைஃப்ரி கூறுகையில், பல இளம் மலேசியர்கள் வவுச்சர்களையும் பிற ஊக்கத்தொகைகளையும் ரொக்கப் பணத்தைப் போல உண்மையான உதவியாகக் கருதுவதில்லை என்று தெரிவித்துள்ளார். PKR இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் ஒருவர், முதல் வீட்டை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் முழுமையான முத்திரைத் தீர்வை விலக்கு(full stamp duty…
1எம்டிபி சம்பந்தப்பட்ட கேள்விகளை அவைத் தலைவர் தடுக்கிறார்
எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த குறைந்தபட்சம் 10 1எம்டிபி சம்பந்தப்பட்ட கேள்விகளை நாடாளுமன்ற மக்களவைத் தலைவரின் அலுவலகம் நிராகரித்துள்ளது. நிராகரிக்கப்பட்டவைகளில், எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் பிரதமர் அல்லது நிதி அமைச்சரிடம் கேட்டிருந்த 1எம்டிபி சம்பந்தப்பட்ட நான்கு கேள்விகளும் அடங்கும். அந்நான்கு…
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
மலேசியாஇன்று -வின் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நமது பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற இலக்கணமற்ற சூழலில் வாழ்வதால், அனுசரித்துச் செல்வது என்ற வகையில் எதையும் தாங்கும் இதயமாக நாம் மாறிக்கொண்டுருப்பதால், இதயத்தின் துடிப்பும் அதிகமாகி வருகிறது! இந்த தீபாவளி…
தியன் சுவா சிறையிலிருந்து அக்டோபர் 27 இல் விடுவிக்கப்படுவார்
காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா அவரது ஒரு மாத கால சிறைத் தண்டணையின் முடிவில் அக்டோபர் 27இல் விடுதலை செய்யப்படுவார். விடுதலை செய்யப்படும் தியன் சுவா அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று அவரது வழக்குரைஞர் என். சுரேந்திரன்…
ஜொகூரில் பீர் விழா, நடத்தலாம் என்கிறார் மந்திரி புசார்
அக்டோபர் விழா (பீர் விழா) ஜோகூர் மாநிலத்தில் நடத்தப்படுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை மாநில மந்திரி புசார் தற்காத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்நிகழ்ச்சி பகிரங்கமாக ஊக்குவிக்கப்படவில்லை என்பதோடு இது திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது என்றாரவர். இது நீண்டகாலமாக நடந்து வருகிறது. இது விளம்பரப்படுத்தப்படவில்லை,…
அது வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ: தீயணைப்பு, மீட்புத் துறை உறுதிப்படுத்தியது
கடந்த வாரம் 23பேரின் உயிரைக் குடித்த தீச்சம்பவம் நிகழ்ந்த தாபிஸ் சமயப் பள்ளியின் மூன்றாவது மாடியில் காலணி அடுக்கு, சுவர்கள் முதலியவற்றில் பெட்ரோல் விசிறியடிக்கப்பட்டிருந்தது . “தீ கூரைக்குப் பரவி மூன்றாவது மாடிக் கதவும் பற்றி எரிந்திருக்கிறது. “தீ விரைவாக பரவியதற்கு இரண்டு எல்பிஜி கலன்களிலிருந்து வெளியான எரிவாயு …
பீர் கொண்டாட்டம் கூடாது; ஆனால், இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள்…
சிறந்த பீர் விழா 2017 நடத்தப்படுவதற்கு டிபிகேஎல் தடை விதித்துள்ளது. இவ்விழா (Better Beer Festival 2017) எதிர்வரும் அக்டோபர் 6-7லில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாஸ் கட்சியின் உலாமா தகவல் பிரிவு தலைவர் முகமட் கைருடின் அமன் ரஸாலி இத்தடை விதிப்பை வரவேற்றுள்ளார். கடந்த காலத்தில் இந்த…
முன்னாள் சிலாங்கூர் எம்பி அம்னோவுக்குத் திரும்பி வந்துள்ளதை நஜிப் அறிவித்தார்
முன்னாள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் முகம்மட் முகம்மட் தாயிப் மீண்டும் அம்னோவுக்கு திரும்பி வந்துள்ளதை பிரதமர் நஜிப் இன்று அறிவித்தார். அம்னோ தலைவர்கள் புடைசூழ்ந்திருக்க இந்த அறிவிப்பை கோலாலம்பூரில் அம்னோ தலைமையகத்தில் நஜிப் செய்தார். மாட் தாயிப் என்று அழைக்கப்படும் முகம்மட் 2013 ஆண்டில் பாஸ்…
ஓன்லைன் செய்தித் தளங்கள் பதிவு, ஜெராம் சாடுகிறது
மலேசியாவிலுள்ள அனைத்து ஓன்லைன் செய்தித் தளங்களும் மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடங்கள் ஆணையத்துடன் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனையை கெராக்கான் மீடியா மெர்டேக்கா (ஜெராம்) சாடியுள்ளது. ஓன்லைன் செய்தித் தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிலை மலேசிய ஊடகங்களின் குரலை பலவீனப்படுத்தும் இன்னொரு முயற்சி…
சுரேந்திரன்: விசாரணைக் கைதிகளை லாக்-அப் சட்டை அணியச் செய்வது சட்டவிரோதம்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவோரைக் கட்டாயப்படுத்தி ஆரஞ்ச் நிற லாக்-அப் சட்டை அணியச் செய்வது சட்டவிரோதமாகும் என்கிறார் பாடாங் செராய் எம்பி என். சுரேந்திரன். சுரேந்திரன் முக்கிய பிரமுகர்களான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவும் பெல்டா முன்னாள் தலைவர் இசா சமட்டும் …
குவான் எங்: டிஏபி-யைச் சந்திக்க ஆர்ஓஎஸ் பயப்படுவது ஏன்?
கட்சித் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றிப் பேசலாம் என்றால் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி தலைவர்களைச் சந்திக்க பயப்படுகிறதே என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அங்கலாய்த்துக் கொண்டார். ஆர்ஓஎஸ்ஸைச் சந்திக்க அனுமதி கேட்டு டிஏபி எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதிலில்லை …
மகனுக்கு கன்னத்தில் சூடு வைத்த ஆசிரியரை வேலையிலிருந்து நீக்குங்கள், தந்தையின்…
ஓர் எட்டு வயது மாணவன் வகுப்பில் விளையாடியதற்காக அவனது ஆசிரியர் ஓர் இரும்பு தகட்டை சூடாக்கி அவனது கன்னத்தில் சூடு வைத்துள்ளார். சூடு வைத்த இடத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இச்செயலைப் புரிந்த ஆசிரியர் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட வேண்டும் என்று அம்மாணவனின் தந்தை சைட் சுடு, 32, கோரிக்கை…
‘நஜிப் 41 சிறப்பு அறைகளை வாடகைக்கு எடுத்தார் என்று கூறப்படுவதை…
இந்தோனேசியாவின் பாலியில் விடுமுறை கழிக்கச் சென்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “41 சிறப்பு அறைகளை (presidential suites) வாடகைக்கு எடுத்திருப்பதாக பொய்யான செய்தி பரப்புவோரை அம்னோ -ஆதரவு இணையத்தளம் ஒன்று சாடியுள்ளது. பக்கத்தான் ஹராபான் மற்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஆதரவாளர்கள் இப்படி அவதூறு …
புவாட்: முகைதின் யாசின் ஒரு கபட வேடதாரி
பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா பற்றி பேசுவதற்கு முன்பு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் அவரது வீட்டை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்று சிறப்பு விவகாரங்கள் இலாகாவின் தலைமை இயக்குனர் முகமட் புவாட் ஸார்காசி கூறினார். பல விவகாரங்கள் இருக்கின்றன. அவற்றில்,…
ஐஜிபி: டிஓஜே ‘சிவில் வழக்கில்’ போலீஸ் தலையிடாது
1எம்டிபி-யில் கையாடப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில் வாங்கிய சொத்துகள் தொடர்பாக அமெரிக்காவின் நீதித்துறை தொடுத்துள்ள சிவில் வழக்கில் போலீஸ் தலையிடாது என்பதை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று மீண்டும் வலியுறுத்தினார். “சிவில் வழக்கு என்றால் போலீஸ் தலையிடாது. “இது சிவில் விவகாரம், அதனால் (எப்பிஐ-யுடன் …
சேவியர்: இந்தியர்கள் மேம்பாட்டு திட்ட வரைவு என்பது பாரிசானின் தேர்தல்…
மலேசியர்கள், குறிப்பாக வறுமையிலுள்ள மக்களுக்கு, அரசாங்க உதவித் திட்டங்கள் என்று வரும்பொழுது எவரும் கேள்வி எழுப்புவதில்லை. நாட்டிற்கு அன்று செல்வங்களை அள்ளி வழங்கியது ரப்பர் தொழில், அரசாங்கம் அதன் வருமானத்தில் பெரும்பகுதியை மாரா மற்றும் பெல்டா போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவு செய்யும் பொழுது எவரும்…
பிகேஆர் இளைஞர்: இடைப்பட்ட காலத்திற்கு வான் அசிஸா பிரதமராக இருக்க…
அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்படும் வரையில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நாட்டின் இடைக்காலப் பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று பிகேஆர் இளைஞர்கள் விரும்புகிறார்கள். "அவர் நமது இடைக்காலப் பிரதமர், அவர் நமது முதல் பெண் பிரதமர்", என்று பிகேஆர் இளைஞர் பிரிவுத்…
போலி பட்டங்கள் வைத்துள்ள எம்பிகளும் உள்ளனராம்: டிஏபி எம்பி குற்றச்சாட்டு
எம்பிகளில் சிலர் வைத்துள்ள முதுகலை, முனைவர் பட்டங்கள் போலியானவை என டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் கூறினார். கேள்வி நேரத்துன்போது பேசிய ஒங், “இந்த மக்களவையில் உள்ள சில மாண்புமிகுகள் வைத்துள்ள டாக்டர், முதுகலை பட்டங்கள் போலியானவை” என்று கூறினார். ஆனால், யாருடைய பெயரையும் அவர் …
நஜிப்: சட்டம் 355 ஐ திருத்துவதற்கான மசோதாவை அரசாங்கம் தாக்கல்…
ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் அல்லது சட்டம் 355 ஐ திருத்துவதற்கான தனிநபர் மசோதாவை அரசாங்கம் எடுத்துக்கொண்டு தாக்கல் செய்யாது என்று பிஎன் உச்சமன்றம் தீர்மானித்துள்ளது. "ஆகவே, அந்த மசோதா தொடர்ந்து தனிநபர் மசோதாவாகவே இருக்கும். அது பற்றிய முடிவை அவைத் தலைவர் தீர்மானிப்பார். "அவைத்…
பாஸ்: பிகேஆரிடம் கொடுத்த இடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வோம்
சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலிக்கும் பாஸுக்குமிடையிலான சர்ச்சை மோசமடைந்து வருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆருக்கு “இரவல் கொடுக்கப்பட்ட” அத்தனை தொகுதிகளையும் திரும்ப எடுத்துக்கொள்ளப்போவதாகக்கூட பாஸ் தலைவர் ஒருவர் மிரட்டியுள்ளார். எதிர்வரும் பாஸ் கட்சியின் முக்தாமாரில் பிகேஆருடன் உறவுகளைத் துண்டிக்க முடிவு எடுக்கப்பட்டால் அவ்வாறு நிகழலாம் …
எம்ஏசிசி மூன்றாண்டுகளுக்கு புதுக் கருவிகள் வாங்க முடியாது: பட்ஜெட் இடம்தராது
பட்ஜெட் கட்டுப்பாட்டின் காரணமாக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அதன் தொழில்நுட்பத்தைத் தரம் உயர்த்தவோ புதுப்புதுக் கருவிகள் வாங்கவோ இயலாது என அதன் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் கூறினார். “மூன்றாண்டுகளுக்கு புதுத் தளவாடங்கள் வாங்குவதற்கான நிதி முடக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தொழில்நுட்பத்திலும் உளவுத் தகவல் சேகரிப்பதிலும் …
‘எதிரணி சீனாவை எதிர்க்கவில்லை; பொருளாதார ஏகபோகத்தைத்தான் எதிர்க்கிறது’
மலேசியாவில் சீனாவின் முதலீடு குறித்தும் அவ்வல்லரசிடம் பேரம் பேசப்படும் முறை குறித்தும் கேள்வி எழுப்புவதை வைத்து எதிரணி சீனாவுக்கு எதிரி என்று கூறப்படுவதை அமனா எம்பி ஒருவர் மறுக்கிறார். எதிரணியைக் களங்கப்படுத்த எண்ணுவோர் இந்த விவகாரத்தைப் போட்டுக் குழப்புகிறார்கள் என கோலா திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பஹ்ரின் …
பட்ஜெட் வெட்டால் சீனமொழிப்பள்ளிக்களுக்கான ஒதுக்கீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன
கல்வி அமைச்சுக்கான பட்ஜெட் நிதி ஒதிக்கீடுகள் குறைக்கப்பட்டதால் சீனமொழிப்பள்ளிகளின் இவ்வாண்டுக்கான பாராமரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியனிலிருந்து அளிக்கப்படும் நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சைனா பிரஸ் செய்தியின்படி, கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் இதை உறுதிப்படுத்தினார். இவ்விவகாரம் இம்மாத இறுதிக்குள் தீர்க்கப்படலாம் என்று கூறிய அமைச்சர், அது…
நஸ்ரி: கிளந்தானில் பாஸ் தோல்வி கண்டது, அதனால்தான் ஹாடி ஹுடுட்…
கிளந்தானை முன்மாதிரி இஸ்லாமிய மாநிலமாக்கும் முயற்சியில் பாஸ் தோற்றுப் போனதால்தான் அங்கு கடும் தண்டனைகளை விதிக்க புதிய சட்டங்களைக் கொண்டுவர விரும்புகிறது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறினார். பாஸ் அதன் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் கடும் தண்டனைகளைக் கொடுக்கும் ஹுடுட் சட்டம் அதற்குத் …






