நஜிப் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படலாம் என்று காடிர் எதிர்பார்க்கிறார்

 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்எசிசி) வாக்குமூலம் அளிக்கும் போது முன்னாள் பிரதமர் கைது செய்யப்படலாம் என்று மேன்மக்கள் மன்றத்தின் பேச்சாளர் எ. காடிர் ஜாசின் எதிர்பார்க்கிறார்.

இது போல் முன்பு நடந்துள்ளது. பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கோர்புரேசனில் நடந்ததாக கூறப்படும் ஊழல்கள் குறித்து அதன் தலைவர் முகமட் இசா அப்துல் சாமாட் எம்எசிசியிடம் வாக்குமூலம் அளித்த போது கைது செய்யப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

இன்னொரு விவகாரம் சம்பந்தமாக நஜிப் எம்எசிசிக்கு செவ்வாய்க்கிழமை போக வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறிய காடிர், அவர் வாக்குமூலம் கொடுத்த பின்னர் கைது செய்யப்படக்கூடும். நீதிமன்றத்திடம் தடுப்புக் காவல் உத்தரவு பெற அவர் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவார். அவருக்கு புகழ் பெற்ற எம்எசிசி ஆரஞ்சு டி-சட்டை அணிவிக்கப்படும் என்றார்.

1எம்டிபி விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்ற முடிவிற்கு எவரும் வரலாம், ஏனென்றால் விசாரணைகள் கடந்த காலத்தில் நடந்துள்ளன. நஜிப் அதிகாரத்தில் இருந்ததால் அவை அடக்கிவைக்கப்பட்டன என்று காடிர் மேலும் கூறினார்.