அனைத்துப் பள்ளிகளிலும் மலாய் மொழி மற்றும் வரலாறு கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது

மலேசியாவிலுள்ள சமயப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் இப்போது தேசியக் கலைத்திட்டத்தின்படி மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்கள் கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட தேசியக் கல்வித் திட்டத்தின் கீழான விரிவான சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்களின்படி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவான விதி: தனியார் மற்றும் ‘யுஇசி’ (UEC) பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ பள்ளி நேரத்திலேயே மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களை வழங்க வேண்டும்.

புதிய மதிப்பீட்டு முறை 2027-ஆம் ஆண்டு முதல் படிவம் 3 (Form 3) மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் மதிப்பீடுகள் நடத்தப்படும்.

2027 முதல், இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு சுமுகமாக மாறுவதை உறுதி செய்ய, படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் திட்டங்கள் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும்.

தொழில்நுட்பக் கல்வி 2027 முதல் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தொழில்நுட்பம் மற்றும் இணையவழி திறன்களை மையமாகக் கொண்ட (TVET) கல்வி அறிமுகப்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊக்கப்பள்ளிகள்  5 ஆரம்ப மற்றும் 5 இடைநிலைப் பள்ளிகள் சிறந்த மேலாண்மை மற்றும் தரமான கல்வியை வழங்கும் ‘மாதிரிப் பள்ளிகளாக’ மாற்றப்படும்.

ஆசிரியர்களுக்கான நிதி, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அறைகளை மேம்படுத்தவும் புனரமைக்கவும் 100 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஒதுக்கப்படும்.

STPM, மெட்ரிகுலேஷன் அல்லது டிப்ளோமாவில் 4.0 CGPA பெற்ற சிறந்த மாணவர்களுக்குப் பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் உறுதி செய்யப்படும்.

இலவசக் கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் கட்டண விலக்குடன் இலவசக் கல்வி வழங்கப்படும். மேலும், 10,000 கூடுதல் கல்வி உதவித்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் அனைத்துப் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் மலேசிய அரசியலமைப்பு மற்றும் வரலாற்றை மையமாகக் கொண்ட பொதுப்பாடங்கள் மலாய் மொழியில்  கற்பிக்கப்படும்.

 

-fmt