தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்புமீதான விசாரணை ஷா ஆலமில் நடைபெறும்.
அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிவதற்காகத்தான் இந்த விசாரணை. வழக்கமாக கொரோனர் நீதிமன்றத்தில் நடைபெறும் மரண விசாரணை ஒரு மெஜிஸ்ட்ரேட் முன்னிலையில்தான் நடக்கும். ஆனால், இந்த விசாரணைக்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமை தாங்குவார்.
சுபாங் ஜெயா, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரத்தின்போது எரியூட்டப்பட்ட வாகனங்களில் நெறுப்பை அணைப்பதற்காக அனுப்பப்பட்ட தீயணைப்பு, மீட்புத்துறை பணியாளர்களில் அடிப்பும் ஒருவர்.
கலகக்காரர்கள் தீயணைப்புப் படையினரையும் தாக்கினார்கள்.
தீயணைப்பு வண்டியில் இருந்த அடிப் வெளியில் இழுத்துப் போட்டுத் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதனால் அவர் கடுமையாகக் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 17-இல் அவர் உயிரிழந்தார்.

























