அரசியல்வாதிகளை மலேசிய தூதர்களாக நியமிக்கும் முந்தைய நிர்வாகத்தின் நடைமுறைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும்.
வெளிநாடுகளில் மலேசியத் தூதர்களாக உள்ள அரசியல்வாதிகள் நாட்டுக்குத் திரும்ப அழைக்கப்பட்டு அவர்களின் பணி முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“அரசியல்வாதிகளைத் தூதர்களாக நியமிக்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டிருக்கிறது.
“இனி, அரசுப் பணியாளர்களே தூதரகத் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள்” என்றாரவர்.
பணி ஒய்வு பெறுவோருக்குத் தூதர் பதவியை வெகுமதியாக வழங்கும் பழக்கம் இனி தொடரப்படாது என்று மகாதிர் கூறினார்.