கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.
பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அழகிய நாடு.
அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும் வாய்ப்பும் உரிமைகளாக உள்ளன.
அதன் வழி புரிந்துணர்வும் சகோதரத்துவமும் உருவாக்கம் கண்டு, நாம் இனவாதத்திற்கு அப்பால் இன்பமாகவும் செழிப்பாகவும் இருக்க நாம் அனைவரும் தொடர்ந்து செயல் பட வேண்டும்.