இஸ்தானா நெகாராவில் மகாதிர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹரப்பானின் தலைவர் மகாதிர் நாட்டின் ஏழாவது பிரதமராக இன்று மாலை மணி 5 க்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக இஸ்தானா நெகாராவுக்கு பேரரசரால் அழைக்கப்பட்டிருந்தார்.

மகாதிர், அவரது துணைவியார் சித்தி ஹாஸ்மா அலி மற்றும் இதர தலைவர்கள் இஸ்தானாவுக்கு மாலை மணி 4.40 க்கு வந்து சேர்ந்து விட்டனர்.

ஆனால், பதவிப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி இப்போது இன்றிரவு மணி 9.30 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.