அன்வார்: புத்தாண்டில் அரசாங்கம் முக்கியமான பிரச்சனைகள் மீது கவனம் செலுத்து வேண்டும்

 

நாட்டைப் பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று புத்ரா ஜெயாவை அன்வார் இப்ராகிம் அவரது புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே-யில் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்தவர்கள் இப்போது அதன் சாதனைகள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

அறுபது ஆண்டுகால பாரிசான் ஆட்சியை மிக அமைதியான முறையில் மாற்றியது வாக்காளர்களின் முதிர்ச்சியை காட்டும் அதேவேளையில், தற்போதைய நிலவரம் பற்றி மிகச் சுலபமாக திருப்தி அடைந்து விடக்கூடது என்று அன்வர் தமது சகநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவுறுத்தல் செய்துள்ளார்.

நாம் மிகச் சுலபமாக திருப்தி அடைந்துவிடக் கூடாது, உண்மையில் மக்கள் விரும்பும் சீர்திருத்த திட்டங்களை ‘கண்ணுக்குப்புலப்படாத கை”களால் கீழறுப்பு செய்யப்படும் என்பது குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றாரவர்.

அரசாங்கம் தொடர்ந்து மக்களின் அவலநிலையைத் செவிமடுக்க வேண்டும் என்று மேலும் வலிறுத்திய அவர், மீனவர்கள், பால்வெட்டுத் தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேற்கொள்ளும் போராட்டத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசிய இயற்கைவளங்கள் நிறைந்த நாடு, அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், நமது மிக முக்கியமான சொத்து மக்கள் என்பதை அன்வார் அவரது செய்தியில் வலியுறுத்தினார்.