ஓடாதீர்கள்! வெளிநடப்பை அகோங் கிண்டல் செய்தார்

 

இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதற்குமுன், பேரரசர் சுல்தான் முகம்மட் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஓடி விடாதீர்கள் என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் எதிரணியினர் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி அவர்களிடம், ‘தயவுசெய்து அமருங்கள் மற்றும் ஓடி விடாதீர்கள்” என்று பேரரசர் புன்னகையுடன் கூறினார்.

இது நேற்று பிஎன் மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் முகமட் அரிப் அவைத் தலைவராக பதவி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியின் போது வெளிநடப்பு செய்ததைக் குறிக்கிறது.