பிரபு குடும்பத்தாரின் கருணை மனுவை சிங்கப்பூர் அதிபர் நிராகரித்தார்

சிங்கப்பூர் அதிபர் அலுவலகம் பிரபு என். பத்மநாதன் குடும்பத்தாரின் கருணை மனுவை நிராகரித்து விட்டதாக வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார்.

“அவர்கள் பிரபுவின் சகோதரருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள்”, என்றவர் இன்று காலை வாட்ஸ்ஏப்பில் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மலேசியரான பிரவுவின் குடும்பத்தார், வியாழக்கிழமை, கருணை வேண்டி புதிதாக ஒரு கருணை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

பிரவுவின் தூக்குத்தண்டனை இன்று விடியற் காலை சாங்கி சிறையில் நிறைவேற்றப்படவிருந்தது.

தண்டனை நிறைவேற்றப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது என்று சுரேந்திரன் கூறினார்.

31வயது பிரபுவுக்கு 2014, டிசம்பர் 31-இல் சிங்கப்பூருக்குள் 227.82 கிலோ கிராம் ஹெரோய்ன் கடத்த முயன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.