ஜெய்ன் ராயான் வழக்கில் பெற்றோர்கள் கைது – 7 நாட்கள்…

கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி டாமன்சரா டாமாயில் உள்ள  தனது வீட்டில் இருந்து சுமார் 200 மீ தொலைவில் இறந்து கிடந்த ஆறு வயது ஆட்டிஸ்டிக் சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மடியின் பெற்றோர், அடுத்த வெள்ளிக்கிழமை வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பெட்டாலிங்…

மதப் பள்ளிகள் மீதான ஊடகங்களின் குற்றச்சாட்டுகள் – ஹடியை சாடினார்…

PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், மதப் பள்ளிகளில் "ஒரு சில ஒழுக்கக்கேடு’ நிகழ்வுகளை பிரசுருத்த" ஊடகங்களை சாடியிருந்தார். இது சார்பாக டிஏபி கட்சியின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், ஹடியின்கருத்து உண்மை நிலயை மறைக்க முயல்கிறதா பாஸ் என்று கேள்வி எழுப்பினார்.. இஸ்லாமியக் கட்சி…

பாதை மாறி சென்றதால்தான் கடற்படை ஹெலிகாப்டர் விழுந்தது

ஏப்ரல் 23 அன்று Fennec ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு காரணம் அது  குறிப்பிட்ட திசையில் பறக்காததால்தான் ஏற்பட்டதாக ராயல் மலேசியன் கடற்படையின் இறுதி அறிக்கை கூறுகிறது. பெரித்தா ஹரியான், கடற்படை அட்மிரல் அப்துல் ரஹ்மான் அயோப்பை மேற்கோள் காட்டி, Fennec (AS 555 SN) குறிப்பிட்ட உயரத்தில் பறக்கவில்லை என்றும்…

டிஆர்  குண்டர் கும்பலில் ஈடுபட்ட 20 பேர் மீது குற்றச்சாட்டு

கடந்த ஐந்து ஆண்டுகளாக "கேங் டிஆர்" என்ற குண்டர் குற்றக் குழுவில் ஈடுபட்டதற்காக 26 முதல் 51 வயதுடைய இருபது ஆண்கள் மீது இன்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி அஹ்மத் ஃபைசாத் யாஹ்யாவால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலையசைத்ததாக உதுசான் மலேசியா தெரிவித்துள்ளது.…

அம்னோவுடனான உறவை மேம்படுத்த மலேசியர்களின் மலேசியா கருத்தை டிஏபி கைவிட…

அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரசாலே ஹம்சா கூறுகையில், டிஏபி  தனது “மலேசியர்களின் மலேசியா” முழக்கத்தைக் கைவிட்டால் அம்னோவுக்கும் டிஏபிக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்றார். கூலி என்று பிரபலமாக அறியப்படும் தெங்கு ரசாலே, இந்தக் கருத்து மலாய்க்காரர்கள் டிஏபி மீதான அவநம்பிக்கையைத் தூண்டியது என்றார். “அதனால்தான் டிஏபி…

அரசாங்க மருத்துவ நிலையங்களில் போதிய பணியாளர்கள் இல்லை

மலேசிய மருத்துவ சங்கத்தின் ஆய்வின்படி, நாடு முழுவதும் உள்ள 95 சதவீத பொது சுகாதார வசதிகள் போதுமான மனிதவளத்துடன் போராடி வருகின்றன. மலேசிய மருத்துவ சங்கத்தின் பிரிவு அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் (Schomos) கடந்த மாத தொடக்கத்தில் நடத்திய ஆய்வில், பொது சுகாதார வசதிகளில் 5…

குன்றி வரும் அம்னோவை உசுப்புகிறார் தெங்கு ரசாலி

அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலே ஹம்சா தனது கட்சிக்கு மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து இளம் புதிய தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இப்போது அம்னோவின் ஆலோசகராக இருக்கும் தெங்கு ரசாலி, பெரும்பான்மையான மலாய்க்காரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை இணைக்கத் தவறினால் கட்சிக்கு அழிவு ஏற்படும்…

சிறந்த SPM மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்களின் வருடாந்திர மனவேதனை’

SPM முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் மெட்ரிகுலேஷன் இடங்களை இழக்க நேரிடும் என இரண்டு செனட்டர்கள் அஞ்சுகின்றனர். 2023 SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும், கல்லூரி இடங்களுக்கான விண்ணப்பம்  விரைவில் தொடங்கும் எஸ்பிஎம் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், மெட்ரிகுலேஷன்…

மலேசிய சீன சங்கக் கூட்டமைப்பில் பெரிக்காத்தானுக்கு பலன் இல்லை

மலேசிய சீன சங்கத்துடன் பெரிக்காத்தான் நேசனல் இணைந்து பணிபுரிவது  மலாய்காரர் அல்லாத ஆதரவை ஈர்க்க உதவாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலேசிய சீன சங்கத்துடன் பெரிக்காத்தான் தகவல் தலைவர் அஸ்மின் அலி பரிந்துரைத்த கூட்டாண்மைக்கு பெரிக்காத்தானின் மலாய் அல்லாத கூறு கட்சிகளுக்கு ஆதரவு இல்லாததால் தான் என்று…

தாய் மொழிப் பள்ளிகளின் நிலைத்தன்மையை மதிக்க வேண்டும் – பிரதமர்

சீன மற்றும் தமிழ் தாய்மொழிப் பள்ளிகளின் இருப்பை மதிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், இந்த பள்ளிக்கல்வி முறையை நாடு நீண்ட காலத்திற்கு முன்பே மரபுரிமையாகக் கொண்டிருந்ததை சுட்டிக்காட்டினார். அன்வார் கூறியது, நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸால் மேற்கோள் காட்டப்பட்டது. நேற்றிரவு ஜோகூர் பாருவில் நடந்த தேசிய…

மருத்துவ மாணவர்களின் இனவாத பார்வை  பேரிடராகும்- அம்பிகா கவலை 

பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா சீநிவாசன் சில குறிப்பிட்ட மாணவர்கள் இனவாத கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை பார்ப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) மாணவர் பேரவையின் நடவடிக்கையை குறிப்பிட்டார். அது பூமிபுத்ரா அல்லாத மருத்துவ மாணவர்களை இருதய அறுவை சிகிச்சை துறையில் படிப்பைத் தொடர…

பத்துமலையில் குர்ஆன் ஓதிய சுற்றுலா பயனி கண்டதிற்குள்ளானார்

இந்து மதத்தை கேலி செய்யும் வகையில், பத்து குகைமலை கோவில் வளாகத்தில் குர்ஆன் ஓதிய அயல்நாட்டு சுற்றுலா பயணியின் செயலுக்கு பிரதமர் துறை அமைச்சர் (மத விவகாரங்கள்) முகமது நயிம் மொக்தார் கண்டனம் தெரிவித்துள்ளார். மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகம் மற்றும் மத ஸ்தலங்களின் புனிதம் குறித்த புரிதல்…

அக்மால் சாலேயின் இனவாத அலரல் தேவையற்றது – பேராசிரியர் சாரோம்

மாரா பல்கலைகழகம் பிற இன மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்ற சர்ச்சையில்  மலேசியாகினி கட்டுரையாளர் ஆண்ரு சியா-விற்கு எதிராக அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே விடுத்த கண்டனத்தை பேராசியர் சாரோம் சாடினார், இந்தக் கட்டுரையின் உள்ளடக்கத்துடன் உடன்படாதவர்கள் மாற்றுக் கருத்தைத்  தெரிவிக்க வேண்டும் என்று ஊடகம்…

கத்தாரில் ஹமாஸ் தலைவரைச் சந்தித்தது சரியான முடிவு என்கிறார் அன்வார்

பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம் இந்த மாத தொடக்கத்தில் கத்தாரில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுடன் நடந்த சந்திப்பை நியாயப்படுத்தினார். ஜப்பானின் டோக்கியோவில் நிக்கியின் முதன்மையான வருடாந்திர மாநாட்டில் தி ஃபியூச்சர் ஆஃப்  ஆசியா-வில் நடந்த கேள்வி-பதில் அமர்வில் பேசிய அன்வார், தானும் இஸ்மாயிலும் பல தசாப்தங்களாக…

இருதய  அறுவை சிகிச்சையும் இனவாதமும் 

அண்மையில்  மாரா தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் (Universiti Teknologi Mara (UiTM) இருதய  அறுவை சிகிச்சை  கல்விக்கு (cardiothoracic surgeons)  மலாய்க்காரர்  அல்லாதவர்கள்  அந்த துறையில்  பயிற்சி பெற  அனுமதிக்க  கூடாது  என்ற  விவாதம்  மலாய்காரர்கள் இடையே  தோன்றியுள்ளது. தற்பொழுது  நாட்டில்  இருதய அறுவை சிகிச்சை செய்யும்  மருத்துவர்கள்  மிக…

தேசிய கலாச்சாரத்தை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது –…

மலேசியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் "தேசிய கலாச்சாரத்தை" மறுவரையறை செய்து மற்றும் பல்வேறு சமூகங்களின் "கண்ணியத்தை மீட்டெடுக்க ஒரு கல்வியாளர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். யுசிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலை பேராசிரியரான தாஜுடின் ரஸ்தி, ஒரு புதிய வரையறை நாடு "கடந்த காலத்தை விட அதிகமாக வளர" வேண்டும் என்றார்.…

ஊழலை நிராகரித்தால் வணிகத்தை இழக்க நேரிடும் – நிறுவனங்கள் அஞ்சுகின்றன

கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு (63 சதவீதம்) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) லஞ்சம் மற்றும் ஊழலை நிராகரிப்பது வணிகத்தை இழக்க நேரிடும் என்று அஞ்சுவதாக பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கத்தின் (ACCA) புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. பல சிறு தொழில்களுக்கு லஞ்சம் கொடுக்க மறுக்கும் பேரம்…

தபாலில் தோட்டாக்கள்: தெரசாவுக்கு மரண அச்சுறுத்தல்

செப்புத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் தனது குடியிருப்பு வளாகத்தில் உள்ள தபால்பெட்டியில் இரண்டு தோட்டாக்கள் அடங்கிய கடிதத்தை கண்டுபிடித்ததையடுத்து, நேற்றிரவு கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டார். சிவப்பு மையால் எழுதப்பட்ட கடிதத்தில் மரண அச்சுறுத்தலுடன் இனவெறி அவமதிப்பு இருந்தது என்று டிஏபி சட்டமன்ற உறுப்பினர் பேஸ்புக்கில் தெரிவித்தார். "எனக்கு…

சர்க்கரை நோயை குறைக்க சர்க்கரை மானியத்தை ரத்து செய்ய வேண்டும்

2011 ஆம் ஆண்டுக்கான விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டத்தின் கீழ் சர்க்கரையை வர்த்தமானியாக நீக்குவது, சர்க்கரையின் அளவுக்கான தர நிர்ணய முறையை ரத்து செய்வது மலேசியர்களிடையே நீரிழிவு நோயைக் குறைக்க உதவும் என்று அஸ்ருல் காலிப் கூறுகிறார். சுகாதாரம் மற்றும் சமூகக் கொள்கைக்கான கேலன் மையத்தின்…

பெர்சத்துவின் கடிதம் அர்த்தமற்றது, அதற்கு பதிலளிக்க மாட்டேன் – புக்கிட்…

உறுப்பினர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கோரும் பெர்சத்து கடிதம் "அர்த்தமற்றது" என்றும் அதற்கு பதிலாக மறுப்பு தெரிவித்துள்ளார் புக்கிட் கன்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல். அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ (14 நாட்களுக்குப் பிறகு) நான் காத்திருப்பேன்,…

பூமிபுத்ரா அல்லாதவர்கள் UiTM-இல்  பயில சட்டம் தடை செய்யவில்லை

யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாராவில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை அனுமதிப்பதைத் தடைசெய்யும் எந்த விதியும் சட்டத்தில் இல்லை என்று உரிமைக்கான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அந்த மனித உரிமைகள் குழுவின் இயக்குனர் சைட் மாலிக் (Zaid Malek) இன்று வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக கூட்டாட்சி அரசியலமைப்பின் 153 வது பிரிவைக் குறிப்பிடுகிறார்.…

நாட்டுக்காக உயிர் தியாகம்: சிறப்பு அங்கீகாரம் வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 24 நாள்களில் நாட்டுக்காக சேவையாற்றிய வேளையில் மொத்தம் 12 வீரர்களை பலி கொண்ட 2 சம்பவங்கள் நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆகக் கடைசியாக நேற்று17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 2.30 மணியளவில் ஜொகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையமொன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதத்…

உலு திராம் காவல் நிலையத் தாக்குதலை நடத்தியவர் ஜெமா இஸ்லாமியாவுடன்…

ஜொகூர் பாருவில் உள்ள உலு திராம் காவல்நிலையத்தின் மீது அதிகாலைத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த சந்தேக நபர் தென்கிழக்கு ஆசியப் போராளிக் குழுவான ஜெமா இஸ்லாமியாவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. 19 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபரின் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கைது…