கோவிட்-19 மரணம் சொர்க்கத்துக்கு வழியா?

கி.சீலதாஸ் -     கோவிட்-19 தொற்றுநோய் தாக்க ஆரம்பித்தபோது அது தன் உறவினன் சார்ஸ் போல கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதால் ஒதுங்கிவிடும் என்று நம்பப்பட்டது. அது தவறான நம்பிக்கையென இப்பொழுது தெளிவாகிறது. அந்தத் தொற்றுநோய் 2019ஆம் ஆண்டில் ஆரம்பித்தது போல் அல்லாமல் சார்ஸைவிட மாறுபட்ட வடிவம்கொள்ளும் தரத்தைக் கொண்டிருக்கிறது. இதனால்…

தடுப்புக்காவல் மரணங்கள்: பிரதமர் என்ன சொன்னார்?

இராகவன் கருப்பையா - கடந்த மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த தடுப்புக்காவல் கைதி கணபதி தொடர்பான சலசலப்புகளும் கண்டனங்களும் கோபமும் சோகமும் இன்னும் தணிந்திராத நிலையில் ஒரு மாதம் கழித்து அதே காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு மரணமும் ஜொகூரில் நிகழ்ந்த ஒரு மரணமும் நம்மை மேலும் உலுக்கியுள்ளது. கணபதி…

தடுப்புக்காவலில் பலியாகும் உயிரும், அரசின் கடமையும் – கி.சீலதாஸ்

ஒரு மனிதனின் உயிரை யாராலும் பறிக்க இயலாது. சில குறிப்பிட்ட சட்டங்களின் வழி மட்டும்தான் அது இயலும். நமது வாழ்க்கை பயணம் எவ்வித தடையுமின்றி, தொல்லையுமின்றி, இடைஞ்சலுமின்றி சுமூகமாக அமைந்திருக்க வேண்டுமென நாம் விரும்புவதில், அக்கறை கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்கான அடித்தளம் அரசமைப்புச் சட்டத்தில்…

இனவாத பரிணாம அரசியலில் சிக்கிய மக்கள்!   

இராகவன் கருப்பையா- தேசிய முன்னணியில் இருக்கும் அம்னோவுக்கு நிகராக எதிரணியான பக்காத்தான் ஹராப்பானிலும்ஒரு மலாய்க்கார கட்சி இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் கண்ட கனவின் விளைவுதான் பெர்சத்துவின் உதயம் என்பது நமக்குத் தெரியும். இனவாதம் வழி ஒரு பெரும்பான்மையைப் பெற்று அதில் அதிகாரத்தைச் சுவைக்கும் அரசியலாகும். 1969-க்கு பிறகு உண்டான அரசியல் பரிமாணம் ஒரு புதிய…

தமிழ்ப்பள்ளி நமது உரிமை: அரசாங்கம் திட்டவட்டம்!

இராகவன் கருப்பையா -  இந்நாட்டில் உள்ள தமிழ், சீனப் பள்ளிகள் அரசியலமைப்புக்கு உள்பட்ட ஒன்று என அரசாங்கம் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளது இவ்வாண்டில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய ஒரு இனிப்பு செய்தியென்றால் அது மிகையில்லை. தமிழ், சீனப்பள்ளிகள் நம் நாட்டில் சட்டவிரோதமாக இயங்குகின்றன என தீபகற்ப மலேசிய மாணவர்கள் சங்கம்,…

கல்வியின்யின் பரிணாமமும் அதில் அடைக்கலமாகும் தன்னலமும்

கி.சீலதாஸ் - ஒரு நாட்டின் கல்விக் கொள்கை, அதன் தரம் காலத்தின் மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும். நாட்டின் கல்வி முறை சமுதாயச் சூழல்களைக் கவனத்தில் கொண்டிருக்கின்றனவா என நாட்டு நலனில் கரிசனம் கொண்ட குடிமகன் கேட்க உரிமை உண்டு. அதற்கான பதிலைச் சொல்லும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. எந்த…

அறிவார்ந்த ஆசிரியம், புதிய தலைமுறை ஆக்கம் – குமரன் வேலு

ஆசிரியர் தினச் சிறப்புக் கட்டுரை | இந்த முழக்கவரி, 21-ஆம் நூற்றாண்டுக்கு எவ்வளவு பொருத்தம் என்பதைப் பார்ப்போம். Berguru எனும் சொல்லாடல் ஆசிரியராக இருத்தலும் ஆசிரியரைப் பெற்றிருத்தலும் எனும் இருமைப் பண்பினைக் குறிக்கிறது. #ஆசிரியராக இருத்தல் ஆசிரியராக இருந்தால் தன்னிடம் இருக்கும் ஆர்ந்த அறிவின் உதவியால் புதியத் தலைமுறையை…

பேய்ச்சி நாவல் குறித்த போலிஸ் புகார் சிறுபிள்ளத்தனமானது

பேய்ச்சி என்ற ம. நவீன் எழுதிய நாவல் கடந்த வருடம் (2020) அரசால் தடை செய்யப்பட்டது. அது ஒரு தரமான படைப்பாக இருந்தாலும் அதில் உள்ள சில பகுதிகளில் ஆபாசமான சொற்கள் இருப்பதால் அதைத் தடை செய்யக்கோரி புகார்கள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட அந்த பகுதிகளை அகற்ற நாவலாசிரியர் மறுத்து விட்டார். கலையில் அடிப்படை அம்சம் சொல்வதல்ல; காட்டுவது.…

வாங்க, சமத்துவத்திற்காக ஓடலாம்! – கோமாஸ் இயக்கம்

மலேசியாவில் சமத்துவம் என்பது ஒரு கேள்விக்குறியாகும். இருப்பினும், மலேசியர்கள் அனைவரும் ஒரு சுமுகமான வாழ்க்கையை அரவணைத்து வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம். விடுதலை மலேசியாவில் வாழ்கின்ற இரண்டாம்  தலைமுறையினர், ஒரு இனபேதமற்ற சமத்துவமான மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற சமூக சிந்தனையின் உந்துதல், கோமாஸ் மையத்தின் (PUSAT KOMAS) ஒரு திட்டமாக உருவானது. அது…

நியமனத்தில் உள்ள அரசியல் கலப்பும்,   அக்ரில் சானியிடம் எதிர்பார்பதும்!

இராகவன் கருப்பையா - நாட்டின் 13ஆவது காவல்படைத் தலைவராக கடந்த 4ஆம் தேதியன்று பொறுப்பேற்ற அக்ரில் சானி மீது மக்களின் கழுகுப் பார்வை சற்று அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் புதிதாக பொறுப்பேற்ற காவல்படைத் தலைவர்களை விட இவருக்கு தீர்வு காணப்படாத வேலைகள் நிறையவே காத்திருக்கின்றன. கடந்த…

நம் நாட்டுத் தலைவர்களை மறக்கலாமா!

கி.சீலதாஸ் - இந்த நாட்டில் வாழ்ந்ததாக, வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியர்கள், அவர்களின் நன்மைக்காக, உரிமைக்காக உழைத்தவர்கள் தங்களின் வாழ்க்கையையும் வாழ்நாளையும் எவ்வித சலனமும் இன்றி, கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல், நினைக்காமல் வாழ்ந்தவர்கள் யார்? இந்தியச் சமுதாயம் மனிதருள் மனிதராக வாழ வேண்டுமென ஏங்கினவர்கள் யார்? அவர்களின் நல்ல சிந்தைகள் கைகூடாது…

அரசனை நம்பி புருஷனை கைவிடுமா ம.இ.கா.? திக்கற்ற அரசியலில் இந்தியர்கள்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் அம்னோவின் தோழமை கட்சியாக பின்னி பிணைந்து உறவாடிய ம.இ.கா. தற்போது தீர்க்கமான ஒரு முடிவு செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்காத்தான் அரசாங்கத்தை கவிழ்த்து கொல்லைப்புற ஆட்சியமைத்த…

தடுப்புக் காவல் மரணம்: கொலையல்ல என்பதை அரசாங்கம் நிருபிக்க வேண்டும்,

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தடுப்புக்காவல் கைதிகள் அடையும் மர்மமான மரணங்களுக்கு இன்னமும் தீர்வு காணமுடியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது. ஆகக் கடைசியாக கடந்த வாரத்தில் 40 வயதுடைய கணபதியின் இறப்பு இந்த சோகக்தொடருக்கு மேலும் உரமூட்டியுள்ளது. ஏழு வயது மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுக்குத்…

இந்நாட்டில் திராவிட தேசியம் தேவையா? – கி.சீலதாஸ்

இந்த 2021 ஆம் ஆண்டு ஓர் அற்புதமான சங்கமத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பொதுவாகவே தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை மார்ச் அல்லது ஆப்ரில் மாத காலத்திலும், வைசாக்கி தினம் ஆப்ரில் பதிமூன்றாம் தேதியிலும், மலையாளப் புத்தாண்டு விஷு ஆப்ரில் பதினான்காம் தேதியிலும் கொண்டாடப்படுவது வழக்கம். நேப்பாளத்திலும் பதினான்கு ஆப்ரில்…

பல்லினங்களின் தனித்துவ பண்பாடுகள் – நமக்கு பலமா? பலவீனமா?

கி.சீலதாஸ் - பல இனங்கள் வாழும் நாட்டில் மொழி, சமய, கலாச்சார வேறுபாடுகள் மலிந்து பிரச்சனைகளாக உருவெடுப்பது விந்தையும் அல்ல, ஆச்சரியப்படத் தக்கதுமல்ல. பல இனங்களின் மாறுபட்ட கலாச்சாரங்களில் ஒரு வகை ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முடியுமா? அல்லது பெரும்பான்மையினரின் கலாச்சாரமே நாட்டின் மூலக் கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? ஒரு…

கோவிட்-19 -க்கு எந்த தடுப்பூசி நல்லது?  

இராகவன் கருப்பையா- இவ்வாண்டு இறுதி வாக்கில் மலேசிய மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினருக்கு கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்ற கணிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடக்கத்தில் நிலவிய போதிலும் இன்னும் 2 மாதங்களில், பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையை விட அதன்…

வீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும் – ந காந்திபன்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) கணக்கிற்கு ஏற்ப, குடும்பக் கடன்கள் சுமார் 93.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மலேசியத் தேசிய வங்கி தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட்டதாரிகளின் சம்பளம் RM2,000 / RM2,500- லிருந்து, இப்பொழுது ஏறத்தாழ RM1,500-ஆக இறங்கியுள்ள நிலையில், அரசாங்கம் மௌனம் காத்து வருவது…

தமிழ்ப் புத்தாண்டை அரசியலாக்குவதா? -கி.சீலதாஸ்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது அது பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்றுதான் இந்திய ஆண்டுக் குறிப்பேடுகள் (காலண்டர்கள்). அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் முப்பது விதமான ஆண்டுக் குறிப்பேடுகள் இருந்தன; அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தன. இதைப்பற்றி குறிப்பிட்ட அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, இந்த வேறுபாடுகள்…

ருசிகண்ட புலி பூனையான கதை!

இராகவன் கருப்பையா - மலேசியாவை அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் முன்னின்று நிர்வகித்தது மட்டுமின்றி காலங்காலமாக அரசியல் 'புலி'யாகத் திகழ்ந்த அம்னோ தற்போது மக்களின் கேலிக்கூத்துக்கு இலக்காகியுள்ள ஒரு 'பூனை'யாகிவிட்டது என்றால் அது உண்மையா அல்லது நடிப்பா! அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அதன் தலைவர்களின் சுயநலப் போக்கினால் கடந்த சில மாதங்களாக அக்கட்சி…

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் மஇகா!

இராகவன் கருப்பையா - நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதன் அரசியல் வரலாற்றில் காலங்காலமாக இந்தியர்கள் என்றால் ம.இ.கா.தான் என்ற நிலைமாறி நீண்டநாள்களாகிவிட்டன. கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சிப் பேரணி அக்கட்சிக்கு ஏறக்குறைய சாவுமணியடித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்கடுத்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியைத்…

நஜிப் நடந்த பாதையில் முஹிடினும் பயணம்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தற்போதைய கொள்ளைப்புற அரசாங்கத்தின் தவணைகாலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில்தான் நிறைவுபெறும்.  அதனுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், எரியும் வீட்டில் குளிர் காய்வது போல் நடந்து கொள்வது, அடுத்த பொதுத் தேர்தல் எப்போதும் நடைபெறலாம் என்றே தொன்றுகிறது. அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில்…

அம்னோ மாறுமா? கி.சீலதாஸ்

பதினான்காம் பொதுத் தேர்தலில் அம்னோ தமது அரசியல் அதிகாரத்தை இழந்தது. அம்னோவை வீழ்த்தியவர்கள் அதன் முன்னாள் தலைவர்கள். குறிப்பாக டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம், துன் டாக்டர் மகாதீர் முகம்மது, டான் ஶ்ரீ மையுதீன் யாசின் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அம்னோ அரசியல் கலாச்சாரத்தைக் கைக்கழுவிட்டு புது அரசியல்…

தேவையான தடுப்பூசிக்கு, தேவையில்லா குழப்பம்

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டின் பெரும்பகுதியை கோறனி நச்சில் ஏற்படுத்திய பயத்திலேயே கடத்திய நாம், தடுப்பூசியின் வருகையால் தற்போது நிம்மதி பெருமூச்சில் திளைத்திருப்பது யாரும் மறுப்பதற்கில்லை. நோயின் தாக்கம் உலகளாவிய நிலையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, 'இது எங்கே போய் முடியுமோ' என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் திக்கற்று இருந்த நம்…