யானைக்கும் அடி சறுக்கும்: ஆட்டம் கண்ட அமெரிக்கா!

இராகவன் கருப்பையா - உலகிலேயே மிகவும் பலமிக்க நாடு எது என சிறு பிள்ளையைக் கேட்டால் கூட 'அமெரிக்கா' என்று பட்டென பதில் சொல்லிவிடும். இதனைத்தான் பல்லாண்டுகாலமாக தனது அதிகாரத்தாலும் அகம்பாவத்தினாலும் அடாவடித்தனத்தாலும் தான்தோன்றித்தனமான இதர செயல்களினாலும் மலேசியாவைவிட 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட அந்த வல்லரசு…

பெரிக்காத்தானில் மஇகா : அரசியல் நீரோட்டத்தில் நிலைக்குமா?  

சிவாலெனின் | நாட்டின் 15-வது பொதுத் தேர்தலுக்கான அறிகுறி தென்பட தொடங்கியிருக்கும் சூழலில், நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மஇகா மீண்டும் உயிர்த்தெழுமா அல்லது அடித்து செல்லுமா எனும் கேள்வி அக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்தியச் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், கட்சியை மீண்டும் சரியான இலக்கில்…

கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் – சேவியர்…

இன்று 10-8-20220 பிற்பகல் 1 .00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தில் கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் மீதான விளக்கமளிப்பு கூட்டத்தில், கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு அளித்த விளக்கம்.  கோல்பீல்டு தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2005…

பச்சோந்திகள் தேடும் திடீர் தேர்தல்

 இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அறைகூவல்கள் பல தரப்புகளிலிருந்து அண்மைய வாரங்களாக வலுத்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை, எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் கடந்த வாரம் குறிப்பிட்டார். அம்னோவின் மூத்தத்…

நாடாளுமன்ற போக்கு, சிலரை மாண்புமிகு  என்றழைக்க கூசுதடி நாக்கு!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை 'யாங் பெர்ஹொர்மாட்' என்று அழைப்பது ஆண்டாண்டு காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சட்ட ரீதியான கடப்பாடு இல்லையென்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மரியாதை நிமித்தம்…

மது போதையில் சாலை விபத்து: இதர குற்றங்களும் ஆபத்தானவையே!

இராகவன் கருப்பையா-  மது போதையில் வாகனமோட்டுவோருக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பரிந்துரைகள் நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். சமீப காலமாக நிகழ்ந்த சில சாலை விபத்துகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் பேரளவில் நிலவியதுவே இதற்கான…

200 கிமீ பேரணி : அசஹான் தோட்டத் தொழிலாளர் புரட்சி!!

சிவாலெனின் | மலேசியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் தான் வந்துள்ளது. தங்களின் உரிமைக்காகவும் ஊதிய உயர்விற்காகவும் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், வலி நிறைந்த வரலாற்றை நமக்கு விட்டுச் சென்றுள்ளன. இந்நாட்டில் இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்டதுமுதல் தொழிலாளர் உரிமைக்கான குரலும்…

கருத்து மோதல்கள்: பக்காத்தான் ஹராப்பன் தோல்விக்குக் காரணம்?

ஜெயக்குமார் தேவராஜ் | பொதுவாகவே, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென தனிநபர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசியல் இயக்கங்களும் அவ்வாறே - சிறப்பாகச் செயல்பட விரும்பினால், அவர்களும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஷெராட்டன் நகர்வுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஆதரவாளர்களுடன் நான் நடத்திய பல விவாதங்களில், அவர்களிடையே ஒரு தொலைநோக்குச்…

கொரோனா கொடுத்த பாடம்

இராகவன் கருப்பையா- மலேசியாவை பொறுத்த வரையில் கோவிட்-19 கொடிய நோய் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ள போதிலும் 2ஆவது அலை ஏற்படக்கூடிய சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் உள்ள போதிலும் இவ்வாரம் பள்ளிக்கூடங்கள்…

நிலையில்லாத அரசியலில் மகாதீரின் மகன் முக்ரீஸ்!

இராகவன் கருப்பையா - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் தறுவாயில் இருக்கும் இவ்வேளையில் அவருடைய புதல்வர் முக்ரீஸ் மகாதீரின் அரசியல் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகி உள்ளது. தனக்கென ஒரு பாதையை வகுக்காமல் இதுநாள் வரையில் தந்தையின் நிழலிலேயே குளிர்காய்ந்து வந்த அவர், ஜ.செ.க. அல்லது…

இடைநிலைப் பள்ளியில் தமிழ்

குமரன் வேலு | ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் மட்டுமா வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன? எல்லோரும் டாக்டர்களாக, எஞ்சினியராக, அறிவியல் அறிஞர்களாக ஆகிவிட முடியுமா? அசாதாரணமான மனிதர்கள் தம் திறனால் பளிச்சிடுகிறார்கள். அவர்கள் எங்குச் சென்றாலும் திறமைக்கு உரிய வேலை உண்டு. ஆனால், சாதாரணமானவர்களின் நிலை? எவ்வளவுதான் படித்திருந்தாலும்,…

தரைதட்டிய கப்பலாக  மகாதீர்

இராகவன் கருப்பையா -மலேசிய அரசியல் வானில் ஒரு சகாப்தம் என இதுநாள் வரையில் கருதப்படும் துன் டாக்டர் மகாதீர் தற்போது தரைதட்டிய கப்பலைப் போன்ற ஒரு முட்டுக்கட்டையான சூழலில் சிக்கித் தவிப்பதைப் போல் தெரிகிறது. கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதனை…

தமிழ்ப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர் எண்ணிக்கையைச் சரி செய்வது எப்படி? ~…

2019-இன் தரவுகள் : ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு ஈறாக, மொத்தப் பள்ளிகள் : 525 (அரசு பள்ளிகள் :  160 & அரசு உதவி பெறும் பள்ளிகள் : 365) 30 மாணவருக்கும் குறைவான பள்ளிகள் : 120 30-150 மாணவர்கள் கொண்ட பள்ளிகள் :…

நீதி கிடைத்தும் நிம்மதியில்லை, தொடர்கிறது இந்திராவின் துயரம்

இராகவன் கருப்பையா - கடந்த 2009ஆம் ஆண்டில் தமது முன்னாள் கணவரால் கடத்திச்செல்லப்பட்ட அன்பு மகளை மீட்பதற்கு பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் மலேசிய வரலாற்றில் அவசியம் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்நாட்டில் மதமாற்றம் தொடர்பாக…

பசார் போரோங் காய்கறி சந்தையில் வேலை வாய்ப்பு – எதிர்கால…

இராகவன் கருப்பையா - நமது வாழ்க்கையில் எத்தகைய சிரமமான சூழ்நிலைகளை நாம் எதிர்நோக்கினாலும் அவைகளுக்குப் பின்னால் சில வாய்ப்புகளும் ஒளிந்திருக்கும் என்பது இயற்கையின் நியதி. இதைத்தான் 'ஒப்பச்சினிட்டி இன் டிஃபிக்கல்ட்டி' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கோவிட்-19 தொற்று நோயினால் நம் நாட்டில் பல துறைகள் மீண்டெழ முடியாத அளவுக்கு படுவீழ்ச்சி கண்டுள்ள…

ஐவர் கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன?

யோகி | முதல்நிலை அல்லது முன்னிலை தொழிலாளர்கள் என்று வெறும் பேச்சளவில் துப்புரவு தொழிலாளர்களுக்குப் பெருமை பேசும் அந்தஸ்தை வழங்கிவிட்டு, முன்னிலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்குவிப்பு பணம் மட்டும் கொடுக்கமுடியாது அல்லது அவர்களுக்குப் பாதியாகக் கிள்ளி கொடுப்பது ஏன் என எனக்குப் புரியவில்லை. இதன் தார்ப்பரியம்தான் என்ன?…

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா?

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா? - ஜி.கே கணேசன் - ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியும் ஆவார். [1]. வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் வரலாறு (Westminster system) மலேசிய அரசியலமைப்பு முடியாட்சியும் நமது நாடாளுமன்ற அமைப்பும் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை. உலகெங்கிலும்…

ஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

இவ்வாண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க ஆசிரியர்களுக்கு துணைபுரியும் பள்ளி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணிகள் மேலும் சிறந்து முன்னேற என்…

சத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத உலகப் போர்!

இராகவன் கருப்பையா - கடந்த 1914ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரையும் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2ஆவது உலகப் போரையும் சந்தித்த உலக மக்களுக்கு கோவிட்-19க்கு எதிரான தற்போதைய உக்கிரப் போராட்டம் 3ஆவது உலகப் போருக்கு நிகராகவே உள்ளது. இப்போதைய நவீன உலகமயத்தில் இன்னொரு உலகப் போர் என்பது…

மியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்! – பகுதி 3

ரோஹிங்கியாக்கள் : மியான்மாரின் பூர்வக்குடிகளா? குடியுரிமை பெற்றவர்களா? அல்லது ஏதிலிகளா? ~ சாந்தலட்சுமி பெருமாள் மியான்மாரின் மேற்கே, வங்கக் கரையோரம் அமைந்துள்ளது ரகைன் மாநிலம். இங்குப் பௌத்தர்கள் (பெரும்பாலும் ரகைன் இனம்), இஸ்லாமியர்கள் (ரோஹிங்கியா, கரேன், காமன் இனம்) மற்றும் கிருஸ்தவர்களும் பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். ‘ரோஹிங்கியா’ என்ற…

மகாதீரும் மண்குதிரையும்

இராகவன் கருப்பையா - நாட்டின் 4ஆவது பிரதமராக 22 ஆண்டுகளும் 7ஆவது பிரதமராக 22 மாதங்களும் மலேசியாவை வழி நடத்திய துன் டாக்டர் மகாதீர் நமது அரசியல் வானில் இன்னமும் ஓரளவு செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகவே உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்து பிப்ரவரி மாதத்தில் 3ஆவது…

கார்ல் மார்க்ஸ் : தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனம்!

சிவாலெனின் | வறுமையும் துயரங்களும் விடாமல் துரத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட, தனது ஏழ்மை குறித்து சிந்திக்காமல் தனது குடும்ப வறுமைக்கு வழிதேடி அலைந்து கொண்டிருக்காமல், உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற, முதலாளிகளால் உழைப்பு சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கம் குறித்து சிந்தித்த மாபெரும் சமூகச் சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்சு…

தூக்கு மேடையில்  தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை முழக்கம் செய்த மாவீரன்…

சிவாலெனின் | உலகமெங்கும் முதலாளி வர்க்கத்திற்குத் தொழிலாளர் வர்க்கம் மிரட்டலாகவும் தங்களின் உரிமையை உரக்க சொல்லவும் இன்றைக்கும் துணிந்து நிற்கிறார்கள் என்றா,ல் அதற்கு அன்றைக்குத் தொழிலாளர் தோழர்கள் விதைத்த உணர்வுதான் காரணியம் என்பதை மறுத்திடலாகாது. தொழிலாளர் வர்க்கத்திற்காக, அவர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக எத்தனையோ போராட்டங்களையும் தியாகங்களையும் இவ்வுலகம் கண்டுள்ளது.…