அன்வாரை பதவி விலக கோரும் பேரணியில் 25,000 பேர் கலந்து கொண்டனர்

மலேசியாகினி குழுவின் மதிப்பீட்டின்படி, பெரிகாத்தான் தேசிய எதிர்க்கட்சி கூட்டணி ஏற்பாடு செய்த “ஹிம்புனன் துருன் அன்வர்” பேரணியில் சுமார் 25,000 பேர் கலந்து கொண்டனர்.

இன்று  மதியம் சுமார் 2 மணியளவில் நான்கு இடங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடி, பின்னர் டாத்தாரான்  மெர்டேகாவில் கூடினர், அங்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் அன்வார் இப்ராஹிமை விமர்சித்து உரைகளை நிகழ்த்தி, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

பேரணியின் பாதியிலேயே மழை பெய்யத் தொடங்கியது, ஆனால் போராட்டக்காரர்கள் அப்படியே நின்றனர். ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தது, மாலை 5 மணிக்குப் பிறகு கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி  மலேசியாகினி சுமார் 25,000 பேர் கலந்து கொண்டதாக மதிப்பிடுகிறது.

பேரணியில் 3,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள்  கலந்து கொண்டதாக மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் பி புனிதன் கூறினார்.