பயணங்கள் முடிவதில்லை! ~ சசிகுமார் இராகவன்

கள மொன்றைக் கண்டேன், படை யேதுமில்லை.  குடி லொன்றைக் கண்டேன், உயி ரோட்டத்தோடு.   உடன் நின்றுக் கொண்டேன், உள மார அன்று. மனம் சொன்ன வழியே, சில நண்பர் களோடு. உடன் வரச்சொல்லி கேட்டது முண்டு, வந்தவரில் சிலர் விடைபெற்றதும் நன்று.   இரசித்திட இதுவோ, கதை யொன்றுமில்லை, களம் கண்டபின்பு, கன…

யாதும் ஊரே யாவரும் கேளீர்-துரை.மாலிறையன்

யாதும் ஊரே யாவருமே அன்புக் குரிய நம்மக்கள் தீதும் நன்றும் பிறராலே தீட்டித் தருதல் இலைஎன்றார் காதல் தமிழ்பால் கொண்டவராம் கணியன் பூங்குன் றன்னவராம் ஆய்தல் வேண்டும் அவர் மொழியை அறிவுள் ளவராம் வையத்தார்;   நலமாய் அறிவை நாட்டியவன் நற்போர் எல்லாம் சூட்டியவன் நிலத்தில் ஏரைப் பூட்டியவன்…

வானுறைந்த வரகவி நீவாழி – குமரன் வேலு

எதுகை மோனை இலக்கணத்தில் எழுதி எழுதிச் சிவந்தகைகள் அதிகம் தமிழை ஆய்ந்தாய்ந்தே ஆதன் தன்னை இனித்தமெய்கள் சதிகள் செய்யாத் தங்ககைகள் தமிழுக் காக வாழ்ந்ததிங்கே விதிகள் செய்த கோலத்தாலே விரைவாய் உலகை நீத்ததின்றே!   சீனி நைனா எனச்சொன்னால் தேனும் தமிழும் உவமைவரும் தேனிப் போல தேந்தமிழைத் தேடிச்…

ஒரு கரு மைப் பொழுது.. – சிவா லெனின்

இது ஒரு கரு மைப் பொழுது   வாக்குப் பெட்டிகள் வலுவிழந்து போயின கொள்ளைப்புறக் கதவுகள் திறந்தே இருப்பதால்..   விலைப்பட்டியலோடு மாண்புமிகுகள் ஏலத்திற்காகக் காத்துக்கிடப்பதால் குப்பைகளை மறுசுழற்சி செய்ய நாடாளுமன்றத்தின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.   விலை பேசப்பட்ட தவளைகளின் வருகைக்காக நாற்காலிகள் காத்துக் கிடக்கின்றன -…

ஆசிரியத் தெய்வமே உன்றன் மலரடிப் பணிகின்றேன்

காசு கொடுத்துப் படிக்கவில்லை - நான் காசுக் காகவும் படிக்கவில்லை பாசத் திற்கா கவேபடித்தேன்- உன் பாராட் டுக்கா கவேபடித்தேன் ஆசான் உன்றன் முகம்பார்க்க- நான் அதிகா லையிலே எழுந்திடுவேன் கூசும் குளிரை மறந்திட்டேன்- தினம் குளிர்ந்த பூவாய் மலர்ந்திட்டேன்! வாடா குமரா என்றதுமே - என் வாடி…

பவனி வா பெண்ணே..

உன்னை தென்றலென்றால், புயல் கோபம் கொள்ளும்… மழையென்றால், வெள்ளம் சினம் கொள்ளும்… ஒளியென்றால், ஞாயிறு தோற்று போகும்… பனியென்றால், நிலவு சபித்து விடும்... அழகென்றால், மயில் மாய்த்து விடும்… இசையென்றால், குயில் கடிந்து கொள்ளும்… உன்னை இதழென்றால் பூக்கள் புதைந்து போகும்… சுவையென்றால், கனிகள் கசந்து போகும்... பசுமையென்றால்,…

மாட்டுப் பொங்கல் – குமரன் வேலு

காடாய்க் கிடந்த விளைநிலத்தைக் கழனி யாக்கப் பாடுபட்டு வீடாய் எண்ணிப் படுத்துறங்கி விடிந்தும் கூட வினையாற்றி ஓடாய்த் தேய்ந்த உழவரெல்லாம் உதவும் மாடு வளர்த்தாரே! மாடாய் உழைத்த உழவரென்றும் மாடாய் மாட்டை நினைத்ததில்லை!   வளரும் கன்றாய் வாங்கிவந்து வயிறுப் புடைக்கப் புல்லையிட்டு வளர்ந்தும் கூட மகனைப்போல் வாஞ்சை…

பொங்கல் என்றால் தமிழருக்குப், பொங்கித் தின்னும் ஒருநாளோ?

காலைப் பனிநீர் மேலொழுகி கன்னம் தொட்ட வேளையிலே சாலப் பொருந்தும் பட்டுடையில் சாந்த மாக நின்றபடி கோலப் பொட்டு வைத்ததொரு குட்டிப் பானை முன்னாலே காலப் பரிதி எழும்திசையில் கரும்பைக் கட்டிக் காத்திருப்போம்!   கதிரோன் சிறகை விரித்ததுமே கரங்கள் நாங்கள் குவித்திடுவோம் முதிரும் அந்த நாழிகையில் முன்னால்…

அடியெடுக்கும் அலங்காரம்…!  ~ செ.குணாளன்

ஒவ்வொரு நாளும் விடியல்…, ஒவ்வொரு விடியலில் கனக்கும் இதயம்…! வர்கப் போராளிகளுக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் கிழக்கு வானம் கனவில் மட்டும் சிவந்து மடிகிறது…! வேர்களின் சாரத்தில் வியர்வையின் பாரத்தில் செந்நிற வரலாற்றுப் பெட்டகம் மட்டும் கட்டுக் கட்டாய் கனக்கிறது…! நாளையப் பொழுதினில்.. இல்லை இல்லை.. என்றாவது ஒரு பொழுதினில்…

அந்நியன் 2.0 -கி.குணசேகரன்

முகம் அறியாது, முகவரி தெரியாது, உலகையே கலக்குகிறாய்... உனது நோக்கம் அறியாது... சொல்லும் பாடம் புரியாது.. - மனித இனம் உனது பிறப்பு.... சீனாவின் சதியா? யு.எஸ். சூழ்ச்சியா? வௌவாலின் வாரிசா? அறிவியல் அரசியல் பேசாது... வாயை மூடிக்கொள், கைகளைக் கழுவிகொள், தூரநில் , எனும் வாய்ப்பாடு பாடுகிறது.…

வியர்வை தான் மிச்சம்! – விஷ்ணுதாசன்

வியர்வை தான் மிச்சம் - விஷ்ணுதாசன் விலைவாசி விஷம்போல் ஏறிப்போச்சு விவசாயிக்கு வியர்வைதான் மிச்சமாச்சு ஏழைகளை மனதில் வைத்து எவன் சட்டம் தீட்டுறான்! ஏமாற்றிப் பிழைக்கவே தினம் திட்டம் தீட்டுறான்! தாருலையில் தார்போல ஏழை உடம்பு கருகுது! உழைச்ச கூலி கைசேராமல் உள்ளம் குமுறுது! மிதிப்பட்டு மிதிப்பட்டு மெலிந்து…

மாறுபட்ட சமுதாயம் காண்போம்

மாறுபட்ட சமுதாயம் காண்போம் விஷ்ணுதாசன் வண்ணத்துபூச்சி சிறகு வளையல் அணிந்திருப்பதால் அதையும் கொடுமைசெய்தான் வதைப்பதை நியாமென்றான் மனிதன்! ஓநாய் இறந்தால். ஒப்பாரி வைக்கும் ஊனக்கூட்டம் அணில் இறந்தால் வருந்தி அஞ்சலி செலுத்துவதில்லை! சமுதாய முதுகில் உண்மைசாட்டையால் அடிக்க மனதில் உறுதிவேண்டும் காட்டில் முட்களை விலக்கி கள்ளமிலா பூவை சூடவேண்டும்!…

மடிமீது காதல் கனா – விஷ்ணுதாசன்

மடிமீது காதல் கனா - விஷ்ணுதாசன் தென்றல் தாலாட்டும் சோலையில் தேவியின் தென்றல் மடிமீது கைவிரல் வருடும் சுகத்தில் கண்கள்மூடி கனாக் கண்டேன்! அடிபரந்த தென்னைமரமதில் கொத்தாய் குலுங்கும் இளநீர் இடிமின்னல் சூழ்ந்து மேகம் இறங்கி கூந்தல் மோதும்! குயிலுக்கு குரல் பயிற்சி குமரியவள் கொடுக்க கண்டேன் மயிலுக்கு…

இவரல்லவோ தமிழறிஞர் – விஷ்ணுதாசன்

இவரல்லவோ தமிழறிஞர் - விஷ்ணுதாசன் தமிழ் படித்தோர் பிழை பொறுப்பார் தரமிலா சொல் கூறார் வஞ்சியார் தயாள குணமுடையார் சேவை மனமுடையார் தளராத உடலுடையார் தன்மானமுடையார் அறம் பிறழார்! ஆன்றோரை பணிவார் அடிமை வெறுப்பார் சான்றோரை கூடி சாதகம் புரிவார் அறிவுக்கடல் குளித்து ஆழ்கடல் முத்தெடுத்து அன்னை தமிழுக்கு…

என்ன ஒரு பாராபட்சம்!

என்ன ஒரு பாராபட்சம் - சாந்தி முத்துசுவாமி மகள் தனிக்குடித்தனம் போனால் கெட்டிக்காரி மருமகள் போனால் கொடுமைக்காரி! மகள் பகலில் தூங்கினா களைப்பு; மருமகள் தூங்கினால் கொழுப்பு! மகள் சமைத்தால் ஆஹா அருமை; மருமகள் சமைத்தால் ஐயோ கொடுமை! மகள் ஒன்று செய்தாலும் ஆராதனை; மருமகள் என்ன செய்தாலும்…

“மரம்” – வைரமுத்து

வைரமுத்து அவர்களின் வைரவரிகளில் தொலைந்து போன தருணங்கள் நமக்கு உண்டு. அதில், மீண்டும் படித்து இரசிக்கும் கவிதையான வைரமுத்துவின் “மரம்”. வணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்? மரம் என்றீர்! மரம் என்றால் அவ்வளவு மட்டமா? வணக்கம்,அவ்வையே நீட்டோலை வாசியான் யார் என்றீர்?…

என்னை புரிந்துகொள்

  விஷ்ணுதாசன் ஓ..சகியே இது என்ன காதல் வேதனை இளமைக்கு நேர்ந்த சோதனை மனதில் வெய்யில் அடிக்குது மழையும் பெய்யுது ஒன்றும் புரியவில்லை மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை! ஓ..சகியே.. காதல் பூவாசம் வருவதும் குழப்ப புயலில் உதிர்வதும் புதிருக்கு விடையில்லை என் இரவுக்கு உறக்கமில்லை! ஓ..பெண்ணே பாதை…

கிராமத்து மைனர்

விஷ்ணுதாசன் அவன்: தண்ணிகுடம் சுமந்து தனியா போறவளே துணையாய் வரட்டுமா! பிறைபோன்ற இடுப்பில் குடமாய் வரட்டுமா தங்ககுடம் உன்னை நெஞ்சில் சுமக்கிறேன்! அவள்: தங்கசரிகை வேட்டி தளதளக்க; தனியா போற பொன்ன வம்பிழுக்க வந்தீரோ! உடம்ப பாத்துகிட்டு ஊடு போய் சேருமய்யா! உறவுமுறை தெரியாம உளறுவதை நிறுத்திக்கோ! அவன்:…

மன்மத ரதிமாயை

  விஷ்ணுதாசன் கண்மலரம்பு தொடுப்பாள் – அந்த கன்னி காதல்கனி கொய்வாள்! காரிருள் கூந்தல் ஒளிந்து தன் பொன்னொளிர் முகம்காட்டி மாரன் மனையாள் பாடம்சொல்வாள் வேதம் கற்றவர் நாழிகையில் மறப்பார் வேதவிழி இமைக்கையில் இதயம் துடிப்பார் காதவழிப்போவோரும் கனவில் மிதப்பார் கவிதைவேண்டி கவிஞர் நாடி நிற்பார் காதல்கலை சுகமென…

உழைப்பாளி

உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே! உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே! உள்ளவெப்பம் ஒன்று…

அருளா? பொருளா? -விஷ்ணுதாசன்

இறைவா…! நீ படைத்த உலகில் வாழ்க்கையெனும் கடலில் என் கண்களும் என் நெஞ்சமும் தவித்திடும் தவிப்பு இறைவன் மிகப் பெரியவன்! உலகில் யாரும் செய்வதில்லை பொருள் இல்லாமல் சேவை வாழ்க்கையை வாழவே பொருள் என்றும் தேவை பசிவந்து வயிற்றை கிள்ள அழுகை வந்தது இரக்கமில்லா மனிதர் மீது வெறுப்பு…