2024 அழகாய் ஓடி முடிகிறது மாறா நினைவுகள் மௌனம் பேசுகிறது. வானவில் கனவுகள் விழிகளின் கோரையில், வாழ்க்கை ஓர் பக்கத்தை முடித்துக் கொள்ளுகிறது. சூரியன் அலைந்து ஓய்ந்த இரவாகி, நிலவின் மௌனம் காலத்தின் கவியாய் மாறி, ஆண்டு முடிவின் முத்தமிட, அழகிய தொடக்கம் காத்திருக்கிறது. 2025, புதுநாள்…
மன்மத ரதிமாயை
விஷ்ணுதாசன் கண்மலரம்பு தொடுப்பாள் – அந்த கன்னி காதல்கனி கொய்வாள்! காரிருள் கூந்தல் ஒளிந்து தன் பொன்னொளிர் முகம்காட்டி மாரன் மனையாள் பாடம்சொல்வாள் வேதம் கற்றவர் நாழிகையில் மறப்பார் வேதவிழி இமைக்கையில் இதயம் துடிப்பார் காதவழிப்போவோரும் கனவில் மிதப்பார் கவிதைவேண்டி கவிஞர் நாடி நிற்பார் காதல்கலை சுகமென…
உழைப்பாளி
உழைக்கும் பேரெல்லாம் மனம் ஊனமாகி நிற்கின்றார் உழைப்பில் கிடைத்த பொருளெல்லாம் உயர்ந்தோர் கொள்கின்றார்! ஒருவன் வாழ ஒருவன் வாட மனிதன் செய்த விதியிது தருவான் கூலி இறைவனென மனிதநேயம் பேசுது! உழைத்துழைத்து உடல், மனம் களைத்து நிற்கும் வறியரே! உரக்கப்பேசி உரிமை கேட்டால் மலைத்திடுவர் பெரியரே! உள்ளவெப்பம் ஒன்று…
அருளா? பொருளா? -விஷ்ணுதாசன்
இறைவா…! நீ படைத்த உலகில் வாழ்க்கையெனும் கடலில் என் கண்களும் என் நெஞ்சமும் தவித்திடும் தவிப்பு இறைவன் மிகப் பெரியவன்! உலகில் யாரும் செய்வதில்லை பொருள் இல்லாமல் சேவை வாழ்க்கையை வாழவே பொருள் என்றும் தேவை பசிவந்து வயிற்றை கிள்ள அழுகை வந்தது இரக்கமில்லா மனிதர் மீது வெறுப்பு…
இருக்கிறாள் காதலி
இரு பெண்கள் என்னை விரும்புவதால் அவர்களுக்கு நானொருவன் காதலன்! தென்பொதிகை பிறந்தவள் ஒருத்தி தண்நிலவில் வசிப்பவள் மற்றொருத்தி! அழுக்காற்றில் புருவமுயர்த்தி கண்ணில் கனல் உமிழ்வது எதனால்? உள்ளதை சொல்கிறேன் அதில் உனக்கென்ன வந்தது நஷ்டம்! பசுங்கொடிகள் சூழ்ந்த முற்றத்தில் படுத்தி ருந்தேன் கட்டில் மேலே மெல்லியஆடை நழுவ பூவில்…
உழைப்பவர் உலகம்
உழைக்கும் நேரம் உறங்கும் நேரம் வித்தியாசம் இல்லை- இருந்தும் அத்தியாவசியப் பொருள் வாங்க கையில் காசு இல்லை! பையில் பணம் இல்லை! கண்கள் மூடி கனவு காணும் பட்டு மெத்தை வாசிகள்! கண்கள் இருந்தும் காட்சி இருந்தும் காணவில்லை கனவினை கண்டதில்லை உணவினை! காணும் கனவு ஒன்றுதான் மூன்று…
வலிசுமந்த 10 ஆண்டுகள்!
அன்று….. 2009……. தாய் மரணத்தை அடைந்த பின்னும் தாய் மார்பைச் சுவைத்தபடி – சேய் தூங்கிய காட்சியினாலே சோகக் கண்ணீராலும் செங்குருதியாலும் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் 10 ஆண்டுகளின் பின்னர் – அன்று தாய்மார்பை 8 மாத சிசுவாய் சுவைத்த சேய் – இன்று கண்ணீரோடு அதே முள்ளிவாய்க்காலில்…
வைக்காதே
வைக்காதே கெட்ட எண்ணங்களை மனதில் வைக்காதே! கெட்டுபோகிற குப்பைகளை வீட்டில் வைக்காதே! -ரிஜி
உலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்…
அன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது... அந்த வீர விதையின் விடியலைதான் உலகம் பிரபாகரன் என்றது... பிரபாகரன் அவர்கள் அக்கினி குஞ்சியின் அடையாளம்... கடல் கலித்து கரையேறும் கார்த்திகேயன்... வெடித்துச் சிதறும் எரிமலைகளை தன் முதுகில் தூக்கி சுமக்கும் கதிரவன்... தமிழீழ விடுதலை வேல்விக்கு தீ…
ஒளியைத் தேடி
போலியை அறியவியலாத புரையோடிய கண்களும் காணக்கிடைக்காத கடாரம் கிடைத்தாற் போல தொடு கைபேசியில் அரைகுறையாக படித்துவிட்டு, சமுதாயத்தைக் கெடுக்கும், இனவெறியைத் தூண்டும் சேதிகளைப் பரப்பும் மனம் கண்டேன், அங்கு இருளே நிறைந்திருக்க விலகி சென்றேன். நேசிக்காது போவாயோ? என்றே தேடி வந்து வம்பிழுப்போர்க்கு மத்தியிலே நல்லவர்களை அடையாளம் கண்டு…
மகுடம்
அவன் சரியில்லை இவன் சரியில்லை எவன் தான் சரியாய் இருக்கின்றான். வார்த்தையில் ஒன்று வாழ்க்கையில் ஒன்றாய் மாறிப் போய்த்தான் கிடக்கின்றான். குணத்தை மறைத்தான் கொள்கையை மறைத்தான் குரலில் விறைத்தான் பொய்யாய் சிரித்தான்! இருக்கட்டும் நண்பரே இருக்கட்டும் நண்பரே இதனால் எனக்கொரு கவலை இல்லை. உங்களில் இருந்து நான் வேறுபடுகிறேன் …
வளமான வாழ்வு..!
வரமான வாழ்வு #வளமான வாழ்வு..! எந்தன் வாழ்வில் வைபவம் நித்தம் இன்பம் கூட்டுகிறாய் இறைவா வந்தெனை வாழ்த்துகிறாய்..! ஊதியம் நாடி உழைத்துக் களைத்தேன் உற்சாகம் ஊட்டுகிறாய் இறைவா உடன் துணை வருகின்றாய்..! உழைப்பு விதையில் முளைக்கும் காசு உற்ற துணையாக இறைவா பெற்றேன் உன் தயவால்..! கற்ற மக்கள் …
இயற்கை அன்னையே போற்றி போற்றி!!!
எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள் எதினும் அசைவைச் சேர்த்தாய். சொல்லால் இசையால் இன்பம் - எமையே துய்க்கச் செய்தாய்! அடடா! கல்லா மயில், வான்கோழி - புறவுகள் காட்டும் சுவைசேர் அசைவால் அல்லல் விலக்கும் "ஆடற் கலை" தான் அமையச் செய்தாய் வாழி! - 🖤பாவேந்தர் பாரதிதாசன்❤️
வாழ்த்து
அகிலம் புகழ வாழ்த்துகள் ஆதவன் போல் எவரும் நெருங்கா இடம் செல்ல வாழ்த்துகள் இன்பங்களை மட்டுமே காண வாழ்த்துகள் ஈகை குணம் கொண்டு வாழ வாழ்த்துகள் உற்றார் உறவினர் சூழ வாழ வாழ்த்துகள் ஊக்கம் தந்து பலரை வாழவைக்கும் குணம் கொண்டு வாழ வாழ்த்துகள் எவரும் உனக்கு இணை…
நம்பிக்கை …வை
நம்பிக்கை ...வை நம்பிக்கையில்தான் நகருகிறது வாழ்க்கை ...! உன் நாடி ..நரம்புகளில் இரத்தவோட்டத்தை மாற்று... இளமையாய் நம்பிக்கையை ஊற்று... வறண்ட பொழுதினில் வாழ்வின் எல்லைவரை செல்லும் மனது ... அப்பொழுதினில் நாளைய உலகினை நம்பிக்கை வேர்களே நன்றியுடன் உரைக்கும் விடிவோம் என்றுதானே வீழ்கிறான் சூரியன் ... வளர்வோம் என்றுதானே …
அறம்
சரியில்லாத எல்லாவற்றையும் தட்டிக் கேட்டா விட்டோம்? சரியில்லாத எதையும் செய்யாமலா இருந்துவிட்டோம். குறைந்தபட்சம் சரியில்லாதவர்களை புறக்கணித்தாவது இருக்கிறோமா? வாழ்வை அச்சமும், ஆசையும் செலுத்துகிறதா? அறம் செலுத்துகிறதா? -கனவுதாசன்
அலைமகன்
இறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்ட முத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் கந்தகப் புகையால் வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள் நுழைந்துவிட்ட அம்மா இன்னும் திரும்பவில்லை ஓர் நள்ளிரவில் நமது கடலில் நீ வெடிக்கையில் அடித்திற்றுப் பெருமின்னல் வெற்றிச்செய்தியாய் மாத்திரம் வீடு திரும்புவாயெனத் தெரிந்திருந்தால் இன்னும் சில முத்தங்களையேனும் இட்டுத்தீர்த்திருப்பாள் அம்மா…
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
மறுபிறவி என்பதில் நம்பிக்கை இல்லை எனக்கு மற்றவனுக்கு மகனாய் பிறந்துவிடுவேனோ என்ற பயத்தால் என் விழியில் கண்ணீர் வந்ததேதில்லை உன்னால் என் கனவிலும் கஷ்டத்தை பார்த்ததில்லை ஆயிரம்முறை என்னை நீ கடிந்துக்கொண்டாலும் வலி வந்தது என்னமோ உன் இதயத்தில்தான் ஆயிரம் கோடிகள் கொட்டி கோடுத்தாலும் உன் அரவனைப்புக்கு அது…
என் நெஞ்சன்னும் கோவிலிலே நீதான் என் சாமியம்மா…
ஆத்தாஉன்மேல... அந்த ஆகாயத்த போல... பாசம் வைச்சனே.. அது வேசம் இல்லத்தா... பாசம்தானாத்தா.... பள்ளிக்கூடம் போகயிலே பத்து காசு தந்தியே.. அது காசு இல்லாத்தா... என் மேல் வைச்ச பாசம் தானத்தா... ஹஸ்டல்ல படிக்கையில.. அரிசிமாவு தந்தியே.. அது மாவு இல்லாத்தா நீ வச்ச பாசம் தானத்தா... நித்தம்…
பரிதாபம்!
நாட்டு மக்களோ, ஆட்டு மந்தைகள் போல, அவர்களை மேய்ப்பர்களோ, தவறாக வழிநடத்திச்செல்லும், பரிதாபம்! நாட்டுத் தலைவர்களோ, ஏமாற்றுபவர்களாக, கலங்கமற்றவர்களோ, ஊமையாக, மதவெறியர்களோ அலைவரிசையை வேட்டையாடும், பரிதாபம்! நாட்டுக்கென குரல் ஏதுமில்லை, ஆள்பவரைப் போற்றும் குரல் மட்டும் ஓய்ந்ததில்லை வதைப்பவன் இங்கு வீரனாக, அவனின் இலக்கோ கொடுங்கோல்…
என்னைத்தேடும் நான்
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். எழுதிய எழுத்துக்கள் என்னுடையது என்றாலும் அதன் பொருளிலும் நான் இல்லை நீ சிந்திய புன்னகைகளை அள்ளி நான் சிந்தும் கண்ணீரிலும் நான் இல்லை உனக்கக நான் கட்டிய மன கூட்டில் தனி பறவையாய் நான் இல்லை வரிகள்…
மரணம்
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். என் முன்னால் மரணங்கள் நிகழ்கிறது மரணங்கள் வருகையில் அதன் நினைவுகள் விட்டு செல்கிறது மரணம் மட்டும் ஏதோ காரணத்தால் முடிகிறது மரத்தின் இலைகள் உதிர்வதை மரம் பார்ப்பது போல் நான் பார்க்கிறேன் (Saravanakumar) -eluthu.com …
இலங்கை அகதியின் கணீர்க் கவி
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். தமிழர்களே அன்று முள்ளிவாய்க்கால் வாய்க்கால்களில் தண்ணீரைவிட அதிகமாய் எங்கள் கண்ணீரும் செந்நீரும் ஓடியது கடல் நதியில் சேரவேண்டிய எங்கள் குருதி ஆனதோ ராஜபக்சேவின் மடல்செவியில் குறுஞ்செய்தி மெய்யாகத் தமிழன் ஒன்றுபட்டிருந்தால் எங்கள் மெய்கள் இரண்டுபட்டிருக்காது தமிழீழப் பெண்களின்…
எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும். என் பேரு வில்லியம் இல்ல…. அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல… தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல… ’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல… தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ்…