கிராமத்து மைனர்

விஷ்ணுதாசன்

அவன்: தண்ணிகுடம் சுமந்து தனியா போறவளே
துணையாய் வரட்டுமா!
பிறைபோன்ற இடுப்பில்
குடமாய் வரட்டுமா
தங்ககுடம் உன்னை
நெஞ்சில் சுமக்கிறேன்!

அவள்: தங்கசரிகை வேட்டி
தளதளக்க; தனியா போற
பொன்ன வம்பிழுக்க வந்தீரோ!
உடம்ப பாத்துகிட்டு
ஊடு போய் சேருமய்யா!
உறவுமுறை தெரியாம
உளறுவதை நிறுத்திக்கோ!

அவன்: கருத்த குழலழகி
கட்டான முத்தழகி
மனதில் ஏத்திவச்சேன்
அணைக்காம அணையாது
கம்பங்காடிருக்கு
காளை நானிருக்கேன்
கன்னி மனசுவச்சா
கருக்கல் வரை பேசிடலாம்!

அவள்: கருத்த குரங்கழகா
கரடி முடியழகா
கன்னம் பழுத்துவிடும்
கையை ஒடிச்சுடுவேன்
பொட்டபுள்ளயோட
பொறக்கலையா
கண்ணகி சாதிடா
காரி துப்பிடுவேன் ஓடிடுடா!