பவனி வா பெண்ணே..

உன்னை

தென்றலென்றால், புயல் கோபம் கொள்ளும்…

மழையென்றால், வெள்ளம் சினம் கொள்ளும்…

ஒளியென்றால், ஞாயிறு தோற்று போகும்…

பனியென்றால், நிலவு சபித்து விடும்…

அழகென்றால், மயில் மாய்த்து விடும்…

இசையென்றால், குயில் கடிந்து கொள்ளும்…

உன்னை இதழென்றால்

பூக்கள் புதைந்து போகும்…

சுவையென்றால், கனிகள் கசந்து போகும்…

பசுமையென்றால், நிலம் வறண்டு கிடக்கும்…

வீரமென்றால், ஆயுதம் பகைத்து கொள்ளும்…

வண்ணமென்றால், வானவில் மறைந்து போகும்…

புன்னகையென்றால், பொன் நகை நெளிந்து போகும்…

 

சிங்கப் பெண்ணே,

சுதந்திரப் பெண்ணாய் வையகம் ஆள வா….

சமுதாய மறுமலர்ச்சியாய் திகழ வா…..

சீர்த்திருத்த எழுச்சி ஒலியாய் எழுந்து வா…..

புவியில் புத்தாக்கப் புதுச்சுடராய் ஒளி வீச வா…..

வன்மை மட்டுமல்ல, மென்மையும் கொண்ட

பெண்மையாய் பாரெங்கும் பவனி வா…..

 

எழுத்து :- மு. ப. வீரமா இராஜன்