ஓராயிரம் நினைவுகளுடன் கோடி கனவுகள்

 

2024 அழகாய் ஓடி முடிகிறது

மாறா நினைவுகள் மௌனம் பேசுகிறது.

வானவில் கனவுகள் விழிகளின் கோரையில்,

வாழ்க்கை ஓர் பக்கத்தை முடித்துக் கொள்ளுகிறது.

சூரியன் அலைந்து ஓய்ந்த இரவாகி,

நிலவின் மௌனம் காலத்தின் கவியாய் மாறி,

ஆண்டு முடிவின் முத்தமிட,

அழகிய தொடக்கம் காத்திருக்கிறது.

2025, புதுநாள் போல வெண்சிகை விரிக்கிறது,

கனவுகள் பூக்கும் பூங்காவாய் திகழ்கிறது.

வானத்தின் கரையில் நம்பிக்கையின் ரகசியம்,

விழிகளில் நம்பிக்கை ஒளியாகக் கசிகிறது.

காலத்தின் ஓசை இதழில் பாடும் கீதம்,

மறுமலர்ச்சி வாழ்வின் மறுமொழியாக.

வெற்றி தோல்விகள் துணையாய்,

இன்ப துன்பங்கள் இனிய தாளமாய்.

புது வருடம் ஒரு கவிதை! 

நாளை தோளில் கனவுகள் சுமந்தே பயணம் தொடரும். 

அதிகாலையிலிருந்து ஆனந்தத்தின் அவிழல், 

புது வாழ்வின் அழகிய வெளிச்சம்!

– கோசிகன் ராஜ்மதன்