வியர்வை தான் மிச்சம்! – விஷ்ணுதாசன்

வியர்வை தான் மிச்சம்
– விஷ்ணுதாசன்

விலைவாசி விஷம்போல் ஏறிப்போச்சு
விவசாயிக்கு வியர்வைதான் மிச்சமாச்சு
ஏழைகளை மனதில் வைத்து
எவன் சட்டம் தீட்டுறான்!
ஏமாற்றிப் பிழைக்கவே தினம்
திட்டம் தீட்டுறான்!
தாருலையில் தார்போல ஏழை
உடம்பு கருகுது!
உழைச்ச கூலி கைசேராமல்
உள்ளம் குமுறுது!
மிதிப்பட்டு மிதிப்பட்டு
மெலிந்து போயிட்டான்!
மிரட்டலுக்குப் பயந்து நடுங்கி
நலிந்து போயிட்டான்!
ஏழை வாழ்வை பார்க்கும் போது
கண்கள் செந்நீர் கோர்க்குது!
இவர் வாழ்வை உயர்த்திடவே
எழுதத் தோணுது!
பதவிமேடை ஏறத் துடிக்கும்
பணம் படைத்தவரே!
ஏழை வாழ்க்கைக்கு காப்பீடு
தந்து பின் ஓட்டு கேளுங்கள்!