புனிதமான பாரம்பரியம்தான் நகர உருவாக்கத்தின் கரு   

தாஜுடின் ரஸ்டி – நகரம் என்றால் என்ன? ஒரு நாடு என்றால் என்ன? கோலாலம்பூரில் 130 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலை இடமாற்றம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு இந்தக் கட்டுரை இடைநிறுத்தத்தையும் அர்த்தத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன், இது இன்னும் நகரத்தில் பல இந்துக்களால் மதிக்கப்பட்டு பேணப்படுகிறது.

பட்ட காலிலே படும் என்பது போல் காயத்திற்கு இன்னும் அவமானத்தை சேர்க்கும் விதமாக, அங்கு ஒரு மசூதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது; வேறுவிதமாகக் கூறினால், கோவிலுக்குப் பதிலாக ஒரு மசூதி. எப்போதாவது அப்படி ஒன்று இருந்தால் இது கண்டிப்பாக ஒரு பூதகரமாக வெடிக்கும் அரசியல் பிரச்சினையாக உருவாகும்.

இந்தத் திட்டத்திற்கு சம்மதித்த தலைமை, மலேசிய அரசியலையோ அல்லது தேசம் எதைப் பற்றியது என்பதற்கான உணர்வையோ புரிந்து கொள்ளவில்லை.

தாஜுடின் ரஸ்டி

இந்தத் தலைவர்கள் ஒரு பாரம்பரியத்தையும் புனிதமான கலைப்பொருளையும் பாரம்பரிய அந்தஸ்து இல்லாத ஒரு புனித கலைப்பொருளுடன் மாற்றுவது போன்ற பிரச்சினைகளைப் பாராட்டவோ அல்லது கண்ணியத்தைக் காட்டவோ இல்லாதபோது, ​​மக்களுக்கு அதிகாரம் மற்றும் சேவை செய்யும் இடத்தில் இருக்க எந்தத் தகுதியும் அதிகாரமும் இல்லை.

ஒரு நாடு என்றால் என்ன? இது அனைத்து இனங்கள் மற்றும் நம்பிக்கைகளின் கூட்டு பாரம்பரியம் மற்றும் கண்ணியம். நாடு என்பது நிலப்பரப்புகள், கட்டமைப்புகள், நீர்நிலைகள், கீழே உள்ள கனிமங்கள் மற்றும் மேலே உள்ள வானத்தால் ஆனது.

ஆனால் ஒரு நாடு அதன் மக்களின் உணர்வில் வாழ்கிறது.

மக்களின் மனநிலை என்ன? முதலாவதாக, அது நம் மக்களின் வரலாறு ஆகும்.

சிலர் நமது நாட்டின் வரலாறு ஓர் இனத்தின் அடிப்படையில் உள்ள  வரலாறு மட்டுமே என்று கூறுகிறார்கள், ஆனால் நான் அதற்கு  உடன்படவில்லை.

அந்தக் கருத்து நீண்ட காலத்திற்கு முந்தைய மற்றொரு நாட்டின் வரலாற்றைக் குறிக்கிறது. அந்த நாடு இனி இல்லை, இப்போது இருப்பது மலேசியாவின் வரலாறு.

எனவே, சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து பொருளாதார அல்லது அறிவியல் பிரச்சினைகளுக்கும் முன், ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்வது பற்றிய விவாதம் முதலில் வர வேண்டும்.

இது எதை உள்ளடக்கியது? பணம் அல்ல, நிலம் அல்ல, பட்டங்கள் அல்ல. தேவைப்படுவது ஒருவருக்கொருவர் கண்ணியத்தையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமே, அவ்வளவுதான்.

நம்மை ஒன்றிணைக்க நமக்கு ஒரு அமைச்சகம் தேவையில்லை, நல்லிணக்கத்தில் வாழ நினைவூட்ட மத அமைச்சகம் தேவையில்லை. மதிக்கவும் மரியாதையை  பின்பற்றவும் நாம் அறிந்துகொண்டால், அதுவே போதும்.

ஆனால் மரியாதை என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்கிறோமா?

நம்மில் பெரும்பாலோர் புரிந்துகொள்கிறோம். ஆனால், மரியாதையை நாம் மேலோட்டமாகப் புரிந்துகொள்கிறோம்.

மரியாதை என்பது நமது சமூக, பொருளாதார மற்றும் ஆன்மீக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வாறு தேவை என்பதை நமக்கு நாமே சொல்லிக் கொள்வதாகும். ஒருவருக்கொருவர் இல்லாமல் நாம் யாரும் இல்லை என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதுதான் மரியாதை.

மேலே உள்ள வாதத்தைப் பின்பற்றினால், ஒரு நகரம் என்பது கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வடிகால்கள் மட்டுமே. அவ்வளவுதான். கட்டப்படுவதும் இடிக்கப்படுவதும் DBKL போன்ற நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் DBKL நகரத்தை எப்படி வடிவமைக்க வேண்டும், எதை இடிக்க வேண்டும், அல்லது எதைக் கட்டலாம் என்று யார் சொல்கிறார்கள்? அது நாம்தான்.

நாம் அனைவரும் எப்படி, எந்த கட்டிடங்களில் வாழ வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பங்கேற்க வேண்டும்.

அதனால்தான் பல நாடுகளில் பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. இத்தகைய சட்டங்கள் நமது வரலாற்றைப் பாராட்டுவதை உறுதி செய்கின்றன; நமது முன்னோர்கள், அவர்கள் பத்தானி, சுமத்ரா, ஜாவா, இந்தியா அல்லது சீனாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நாட்டைக் கட்டியெழுப்பிய வரலாறு அவர்களின் வியர்வையையும் அர்ப்பணிப்பையும் அடிப்படையாக கொண்டது.

இந்த மூதாதையர்கள் சாலைகளை அமைத்தனர், ரயில் பாதைகளை அமைத்தனர் மற்றும் ரப்பரை வெட்டி எடுத்தனர், அவை தேசத்திற்கு உயிர் கொடுத்தது. இந்த குடியேறிகள் வந்தபோது, ​​ஒரு புதிய நிலத்தில் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப வீடுகள், பள்ளிகள் மற்றும் சமய சார்ந்த கட்டிடங்களை கட்ட அனுமதிக்கப்பட்டனர்.

நகரமயமாக்கல் புதிய பொருளாதார உரிமையாளர்களுடன் வந்தபோது, ​​இந்தக் கட்டிடங்களில் சிலவற்றை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் சிலவற்றை அவை இருந்த இடத்திலேயே தொடர அனுமதித்தனர்.

மக்கள் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சமயம் அல்லது மதம் சார்ந்த்க் கட்டிடங்கள் நமது தேசத்திற்கு முக்கியமான அடையாளங்களாக இருக்கின்றன என்பது எனது கருத்து.

ஒரு மதக் கட்டிடம் அதன் அருகே வசிக்கும் ஒரு சமூகத்தின் இதயமாக இருக்கும்போது அதை வேறு இடத்திற்கு மாற்றுவதில் எந்த தர்க்கமும் இல்லை.

இஸ்லாமிய நகரம் பற்றிய எனது கோட்பாட்டைப் பற்றிய எனது சொற்பொழிவுகளில், நான் கற்பிக்கும் கொள்கைகளில் ஒன்று, அனைத்து மதக் கட்டிடங்களையும் நிலைப்படுத்துவதாகும்.

நகராட்சி மன்றங்கள் இந்த புனித பாரம்பரிய கட்டமைப்புகளை சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதன் மூலம் மதிக்க வேண்டும், ஏனெனில் அவை நகரத்தின் பண்பாட்டு மையங்களாக செழித்து நிற்கின்றன, தனித்து நிற்கின்றன.

KL இன் இதயம் மில்லியன் ரிங்கிட் சதுர அடியுடன் கூடிய பிரகாசிக்கும் KLCC இல் இல்லை, மாறாக நாட்டின் சமூக, மத மற்றும் அரசியல் உயிரோட்டமாக செயல்பட்ட பாரம்பரிய கட்டிடங்களில் உள்ளது.

இந்த தளங்களை அகற்றினால், மலேசியா இன மற்றும் மத வெறுப்பால் நொறுங்கிப் போகும் அதே வேளையில், இந்த தேசத்தையும் நாட்டையும் உருவாக்கியது யார் என்பது பற்றி அடுத்த தலைமுறைக்கு எதுவும் காட்ட இயலாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

DBKL இன் முக்கிய பங்கு, தேசத்தை முதலில் உருவாக்குதல் ஆகும், அடுத்ததுதான்  நகரம், என்பதை  தலைமையில் இருப்பவர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது.

FMT