பயணங்கள் முடிவதில்லை! ~ சசிகுமார் இராகவன்

கள மொன்றைக் கண்டேன், படை யேதுமில்லை. 

குடி லொன்றைக் கண்டேன், உயி ரோட்டத்தோடு.

 

உடன் நின்றுக் கொண்டேன், உள மார அன்று.

மனம் சொன்ன வழியே, சில நண்பர் களோடு.

உடன் வரச்சொல்லி கேட்டது முண்டு,

வந்தவரில் சிலர் விடைபெற்றதும் நன்று.

 

இரசித்திட இதுவோ, கதை யொன்றுமில்லை,

களம் கண்டபின்பு, கன மஞ்சியதுமில்லை.

விலை ஒன்று சொன்னால், அலை மோதும் புத்தி,

வழி வழியே வந்த, எங்கள் பரம்பரை யிலில்லை.

 

விளக்கங்கள் சொல்ல, நேர மிங்கில்லை.

என்னிடம் விடை கேட்க, நீ யோக்கியனு மில்லை.

வழி தவறிச் செல்ல, நான் சிறுவனும் அல்ல.

விழி மூடிக்கொள்ளும், ஒரு மூடனு மல்ல.

 

போருக்கு முன்பு,  ஏன் தூதனுப்ப வில்லை?

உனை சாய்த்திடும் திட்டம், என்னில் மறைந் திருக்கவில்லை.

மனம் நொந்த பின்பும், நான் தலை குனியவில்லை.

எனைக் கணித்திடும் ஆற்றலை, நீ அறிந் திருக்கவில்லை.

 

பயணங்கள் அது முடிவதில்லை …