அந்நியன் 2.0 -கி.குணசேகரன்

முகம் அறியாது,
முகவரி தெரியாது,
உலகையே கலக்குகிறாய்…

உனது நோக்கம் அறியாது…
சொல்லும் பாடம் புரியாது.. – மனித இனம்
உனது பிறப்பு….
சீனாவின் சதியா?
யு.எஸ். சூழ்ச்சியா?
வௌவாலின் வாரிசா?

அறிவியல் அரசியல் பேசாது…
வாயை மூடிக்கொள்,
கைகளைக் கழுவிகொள்,
தூரநில் ,
எனும் வாய்ப்பாடு பாடுகிறது.

சோசியம் சோடை போச்சு,
அதிகாரம் பட்டுப்போச்சு,
அரசியல் முடமாச்சு,
உலக வல்லரசு ஆடிபோச்சு.
பொருளாதாரம் நிலைகுத்தி போச்சு
அரசியல்வாதி பேச்சு பொய்யாச்சு,
ஆறுகள் சுத்தமாச்சு,
காற்று புனிதமாச்சு,
இமயமலை ஒளியாச்சி.

சோதனை கொடுத்து,
சாதனை படைத்தாய்,
பள்ளிகள் சொல்லாத பாடத்தை – நீ
சொல்லி கொடுத்தாய்.

நீ போகனும் – அறிவு சொல்லுது
நீ போகாதே  – மனம் வேண்டுது..
நீ போனால்….
இந்தப் பாவிபயல்களின்
ஆணவ ஆட்டம்
தலை காட்டும்
அமைதி கலைந்து,
நிம்மதி தொலையும்.

கடிகார வாழ்க்கை நோக்கி,

கால்கள் ஓடும்.

தயவுசெய்,
போயும் போகாமல் இரு…
நீ ஒரு அந்நியன்
கண் திறந்த கொரோனா!

ஆக்கம் :-

கி.குணசேகரன், ஈப்போ