எங்கள் விதைகள் ..

சுதந்திரம்
வலிமையான விதை
நானும் இங்கு வாழ்கிறேன்
எனக்கும் சுதந்திரம் வேண்டும்
உங்களைப் போலவே.

உங்களைப் போலவே
என் காலின் கீழ்
மிதிபட்டுக் கிடக்கும் நிலம்
எனக்கும் சொந்தம்.

ஒவ்வொரு நாளும் ரொட்டித் துண்டை நம்பி
வாழ முடியாது
வாழும்போது மறுக்கப்படும்
உங்கள் கருணைச் சுதந்திரம் செத்த பின்
தேவையில்லை எனக்கு.

சுதந்திரம் என்பது
சமரசம் செய்து கொள்வதில் இல்லை,
பரிதாபத்தினால் வழங்கப்படுவதும் இல்லை.

சுதந்திரம் – அது
ஜனநாயகத்தின் குரல் – அது
ஓங்கி ஒலிக்கும்வரை,
ஓங்கிய நம் கைகள்
சோர்ந்து விடக்கூடாது.