அடியெடுக்கும் அலங்காரம்…!  ~ செ.குணாளன்

ஒவ்வொரு நாளும்

விடியல்…,

ஒவ்வொரு விடியலில்

கனக்கும் இதயம்…!

வர்கப் போராளிகளுக்கும்

உழைக்கும்

தொழிலாளர்களுக்கும்

கிழக்கு வானம்

கனவில் மட்டும்

சிவந்து மடிகிறது…!

வேர்களின் சாரத்தில்

வியர்வையின் பாரத்தில்

செந்நிற வரலாற்றுப்

பெட்டகம் மட்டும்

கட்டுக் கட்டாய்

கனக்கிறது…!

நாளையப்

பொழுதினில்..

இல்லை இல்லை..

என்றாவது

ஒரு பொழுதினில்

வானம்

பன்னீர் மழையாய்

தூறட்டும்

சிவந்த

வானத்தில் இருந்து

சில்லென்றக் காற்று

இதயத்தை வருடட்டும்

என்ற

கனா மட்டும்

இன்னும்தான்

இன்னும்தான்

 

எங்கள்

வேர்வைத் துளிகளுக்கும்…!

உழக்கும் கைகளுக்கும்….!

சமூக அரசியலில்

தொழிலாளர்கள்

மட்டுமே..,

சமூக இடைவெளிக்குள்

சிக்கிய

வெப்பக் காற்றாய்…!

உழைக்கும்

மனிதம்

மட்டும்

என்றுமே

இங்கு

காட்சிப் பொருள்தான்..!

ஆனால்…

நமக்கான

மாட்சி அலங்காரம்

எந்நாள் என்று

கைக்கூலிகள்

களைந்த ஓடைகளாய்

ஓடிக்கொண்டே..!

பன்னெடுங்காலமாக

தொழிலாளர்கள்

மட்டும்

வழி மீது

விழி வைக்கும்

வர்க்கப் பயணிகளாய்…!

தலைமுறைக்

கடந்து

இன்னும்

குருதிக்குள்

 

கூடுகட்டும்

மனித இயந்திரங்கள்..

மூலதனத்தின்

ஊடகத்தில்

சித்தாந்த

நெறுக்கடிகள் தேடி..!

அதிகாரம் இணைவது

அரசியல் கலைப்போல்..

முதலாளிகள் இணைவது

மேம்பாடு என்றாலும்..

மேன்மைக்குரியவர்களின்

மேலாதிக்கம்

தொழிலாளர் கூட்டத்தில்

இயங்குதலையும்

இயங்கவிடாமல்

இடித்துப் பார்த்து

ஒடுக்குதலுக்குள்

எங்கள் தோழர்களே…!

தொழிலாளர்

சித்தாந்தம்

நவீன நாடுகளிலும்

புதியரக வந்துப்

புரட்சி செய்கிறது…!

எழுதுகோள்

தொட்ட

படைப்புகள்

யாவும்

பாட்டாளி மாக்களின்

ஜனநாயகத்தை

மீட்க முடியாமல்

இன்றும்…!

மூலைக்கு வரும்

சமிக்கைகள்

பொதுவுடமைக்கு

 

முலாம் பூசட்டும்…!

உணர்வுகள்

உயர்வாக

கட்டமைக்கும்

வரையில்..

வியர்வைத் துளிகள்

வீணடிக்கப்படுவதுதான்

தொழில் புரட்சி…!

அதிலும்

நவீன உலகில்

தொழில்

புரட்சி 4.0….!

காடுகள்….

மேடுகள்….

தோட்டங்கள்….

பட்டணங்கள்….

மேம்பாட்டில்

தொழிலாளர்கள்…!

ஆனால்…

அதிகாரப் பிடியில்

மட்டும்

சர்வாதிகாரப் பிடில்…

சமரசமோ…

ஜனநாயக அமைப்பில்…!