என்னை புரிந்துகொள்

 

விஷ்ணுதாசன்

ஓ..சகியே
இது என்ன காதல் வேதனை
இளமைக்கு நேர்ந்த சோதனை
மனதில் வெய்யில் அடிக்குது
மழையும் பெய்யுது
ஒன்றும் புரியவில்லை
மனம் ஒரு நிலையில்
இருக்கவில்லை!

ஓ..சகியே..
காதல் பூவாசம் வருவதும்
குழப்ப புயலில் உதிர்வதும்
புதிருக்கு விடையில்லை என்
இரவுக்கு உறக்கமில்லை!

ஓ..பெண்ணே
பாதை தெரியுது
பயணம் தொடருது
போகுமிடம் தெரியவில்லை
பயணத்தில் அமைதியில்லை

கண்ணெனும் காதல்ஊசியால்
இதயத்தை குத்துகிறாய்
பேரழகை ஆடவிட்டு
பேயென அலையவிட்டாய்
சொல்லவும் தெரியவில்லை
நினைவை தள்ளவும் முடியவில்லை
தவிக்கிறேன் என்னை புரிந்துகொள் பெண்ணே!