வாழ்த்து

அகிலம் புகழ வாழ்த்துகள் 
ஆதவன் போல் எவரும் நெருங்கா 
இடம் செல்ல வாழ்த்துகள் 
இன்பங்களை மட்டுமே காண வாழ்த்துகள் 
ஈகை குணம் கொண்டு வாழ வாழ்த்துகள் 
உற்றார் உறவினர் சூழ வாழ 
வாழ்த்துகள் 
ஊக்கம் தந்து பலரை வாழவைக்கும் 
குணம் கொண்டு வாழ 
வாழ்த்துகள் 
எவரும் உனக்கு இணை இல்லா 
உயரம் அடைய வாழ்த்துகள் 
ஏற்றங்களை பெற்று வாழ 
வாழ்த்துகள் 
ஐயம் இல்லாது துணிவுடன் வாழ 
வாழ்த்துகள் 
ஒவ்வொரு வினாடியும் உழைப்புடன் 
வாழ வாழ்த்துகள் 
ஓவியங்கள் படைத்து உன்னை 
பின்பற்றும் உலகம் மாற நீ வாழ 
வாழ்த்துகள் 
ஔவை வழி நடந்து வாழ்க்கை முழுவதும் நீ வாழ்வாங்கு வாழ 
வாழ்த்துகள்….‌‌‌‌

(உமா மணி )

-eluthu.com

 

TAGS: