உழைப்பவர் உலகம்

உழைக்கும் நேரம்
உறங்கும் நேரம்
வித்தியாசம் இல்லை- இருந்தும்
அத்தியாவசியப் பொருள் வாங்க
கையில் காசு இல்லை!
பையில் பணம் இல்லை!

கண்கள் மூடி கனவு காணும்
பட்டு மெத்தை வாசிகள்!
கண்கள் இருந்தும்
காட்சி இருந்தும்
காணவில்லை கனவினை
கண்டதில்லை உணவினை!

காணும் கனவு ஒன்றுதான்
மூன்று வேளை கஞ்சி தான்!
ஒரு வேலை ஒரு வேளை கிடைக்காமல்
கருவேலம் முளைத்த சமையலறை எத்தனை!

அங்கம் தேய உழைப்பவருக்கு
சங்கம் அமைத்தவர்கள் எத்தனை!
சங்கம் வளரும் அமைத்தவர் வாழ்வர்
அரசுகளை உருவாக்கும்
அப்பாவி ஏழைகள்
அப்படியே மாய்வர்!

-விஷ்ணுதாசன்

TAGS: