வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி மொத்தம் உள்ள 56 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

ஜொகூர் பாரிசான் நேசனல் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதற்குப் பதிலடியாக, வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் உள்ள 56 தொகுதிகளிலும் தாங்களும் போட்டியிடப் போவதாக ஜோகூர் பக்காத்தான் ஹரப்பான் அறிவித்துள்ளது.

ஜொகூர் பாரிசான் தலைவரும் ஜொகூர் மாநில முதலமைச்சருமான ஓன் ஹபீஸ் காசி, நேற்று (சனிக்கிழமை) பாரிசான் கூட்டணி 56 மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் பாக்காத்தான் தலைவர் அமினுல்ஹுதா ஹசான் தெரிவித்தார்.

‘எனவே, ஜொகூர் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியும் ஜோகூரில் உள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிட முன்வருகிறது’ (என்று அவர் கூறினார்

ஜோகூர் மாநில முதலமைச்சர் 56 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளதால், நாங்களும் 56 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்,” என்று இன்று ஜொகூர் பாருவில் நடைபெற்ற பக்காத்தான் மாநாட்டில் அவர் கூறினார்.

கூட்டணிக்கான கதவுகளை மூடியதன் மூலம், பாரிசான் மற்றும் பக்காத்தான் கூட்டணிகளுக்கு இடையே நேரடியாகப் போட்டியிடுவதற்கான சூழலை பாரிசான் தங்களுக்குள் உருவாக்கிவிட்டதாக அமினுல்ஹுதா தெரிவித்தார்.

அவர்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்து அதற்கான வழியையும் திறந்துவிட்டுள்ளார்கள். எனவே நாங்கள் பின்வாங்கப் போவதில்லை, என்று அவர் கூறினார்.

அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஜொகூர் மாநில சட்டமன்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தானாகவே கலைந்துவிடும், அதன் பிறகு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

 

-fmt